Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜூன மூர்த்தி பாஜகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.!

ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜூன மூர்த்தி பாஜகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.!

ரஜினி கட்சியில் இணைந்த அர்ஜூன மூர்த்தி பாஜகவில் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 Dec 2020 4:22 PM GMT

தொழிலதிபராக உள்ளவர் ரா.அர்ஜூன மூர்த்தி. இவர் ரஜினிகாந்த் ஆரம்பித்துள்ள கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாஜகவில் நிர்வாகியாக இருக்கும் ஒருவர் எப்படி ரஜினி கட்சியில் நிர்வாகியாக இருக்கிறார். ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறதா என்ற கேள்வி எழுந்தது.


இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அர்ஜூன மூர்த்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக அறிவித்தித்துள்ளது.

இது தொடர்பாக பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் விடுத்துள்ள அறிவிப்பில்: தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன மூர்த்தியின் ராஜினாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார் என்றும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News