Kathir News
Begin typing your search above and press return to search.

வழக்கம் போல உளறிவைத்து வசமாக சிக்கிய ஸ்டாலின்.. கேளி செய்யும் நெட்டிசன்கள்.!

வழக்கம் போல உளறிவைத்து வசமாக சிக்கிய ஸ்டாலின்.. கேளி செய்யும் நெட்டிசன்கள்.!

வழக்கம் போல உளறிவைத்து வசமாக சிக்கிய ஸ்டாலின்.. கேளி செய்யும் நெட்டிசன்கள்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  28 Nov 2020 10:59 AM GMT

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எப்போதும் ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வாடிக்கையாகவே வைத்துள்ளார். அவர் பேசுவதற்கு முன்னரே ஒரு துண்டுச்சீட்டில் குறிப்புகளை எழுதி வைத்து மேடைக்கு எடுத்து வந்து அதனை பேசுவார். அப்படி பார்த்து பேசினாலும் அதனை சரியாக பேசமாட்டார். மாற்றி மாற்றி கருத்துகளை பேசிவருவார். இது திமுக கட்சியில் மட்டுமின்றி நெட்டிசன்களும் கலாய்க்க ஆரம்பித்து விடுவார்கள்.


சுதந்திர தினம் முதற்கொண்டு அனைத்தையும் தேதி மாற்றிதான் கூறி வருவார். இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு காணொளி வாயிலாக ஸ்டாலின் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.


அதே போன்று நேற்று தென்காசி மாவட்டத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் காணொளி மூலமாக பேசினார். அதில், இந்திய விடுதலைப் போராட்டத்தை பூலித்தேவன் முன்னெடுத்த ஆண்டு 1975 என்று தன்னை அறியாமலே பேசினார். இது திமுகவினர் மட்டுமின்றி வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோவை வைத்துக்கொண்டு நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News