உயிருக்கு பயந்து தஞ்சமடைந்த அ.தி.மு.க பெண் வேட்பாளரை காவல் நிலையத்திற்குள் புகுந்து தாக்கிய தி.மு.க-வினர்!
திண்டிவனத்தில் உயிருக்கு பயந்து தஞ்சமடைந்த அ. தி. மு. க. , பெண் வேட்பாளரை போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தி. மு. க. , வினர்

By : Kathir Webdesk
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சியில், திமுக - அதிமுக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பு நிலவியது. இதில் அதிமுக பெண் வேட்பாளர் கொடூரமாக தாக்கப்பட்டார்.
நேற்று 13 -ஆவது வார்டுக்கு உட்பட்ட வால்டர் ஸ்கடர் மேல்நிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்காளர்கள் மத்தியில் வாக்கு கேட்பதில், திமுக - அதிமுக வேட்பாளர்கள் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் இரு தரப்பினருக்கும், அவர்களது ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில், பாதிக்கப்பட்ட இருதரப்பினரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், இது குறித்து ரோசனை காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த அதிமுக வேட்பாளர் சுதா, அவரது கணவர் சரவணனை திமுகவினர் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது.
இரவு 8: 45 மணிக்கு, தி. மு. க. , வேட்பாளர் பாபு தரப்பினர், போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து, அங்கிருந்த பூந்தொட்டி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். அவர்களை தடுத்த போலீசார் மற்றும் அ. தி. மு. க. , வேட்பாளர், அவரது குடும்பத்தாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என, போலீசாரிடம் வலியுறுத்தினார். காவல் நிலையம் முன் அ. தி. மு. க. , வினர் 100க்கும் மேற்பட்டோர் திரண்டனர். அசம்பாவிதம் ஏதும் நேராமலிருக்க போலீஸ் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
