Kathir News
Begin typing your search above and press return to search.

கலைஞரின் நண்பர் ரஜினி  - பிரச்சாரத்தில் பம்மிய உதயநிதி.!

கலைஞரின் நண்பர் ரஜினி  - பிரச்சாரத்தில் பம்மிய உதயநிதி.!

கலைஞரின் நண்பர் ரஜினி  - பிரச்சாரத்தில் பம்மிய உதயநிதி.!

Mohan RajBy : Mohan Raj

  |  22 Dec 2020 8:35 AM GMT

திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சி பற்றிய அறிவிப்பு தமிழகத்தில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ திராவிட முன்னேற கழகத்தின் தலைவர் ஸ்டாலினுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் தி.மு.க தலைவர் இறந்த பின் அவரின் வாரிசு என்ற அடையாளத்துடன் கட்சியில் மூத்தோர்களையும், திறமையானவர்களையும்,உழைத்தவர்களையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை ஸ்டாலின் பிடிந்து அதன் மூலம் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

எனவே கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக கோடிகளில் செலவு செய்து முதல்வர் நாற்காலியை அடைய துடிக்கும் ஸ்டாலினுக்கு திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் ஸ்டாலினின் முதல்வர் கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது.

மக்கள் மத்தியில் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இருக்கும் நல்ல பெயர், மக்கள் ஆதரவு, ரசிகர்கள் பலம், பல தரப்பிலும் பெருகும் ஆதரவு முக்கியமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம், நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து, ஊழல் பெருகும் என்ற பயம் போன்றவை திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சியை ஆட்சியில் அமர வைக்கும் என்பதில் மற்ற கட்சியினரை விட தி.மு.க நன்கு உணர்ந்துள்ளது.

இதனால் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்தை கண்டு பயம் இல்லை என பயத்துடனே தி.மு.க'வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க தலைவரின் மகன் உதயநிதி இன்று திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை பற்றி பயம் இல்லை என கூறியுள்ளார். மேலும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தி.மு.க தலைவரின் நண்பர் என நட்பு வேறு பாராட்டியுள்ளார்.

இரண்டாம்கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக இன்று கடலூர் வந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினியின் அரசியல் வருகையைப் பார்த்து தி.மு.க தலைவர் பயப்படுவதாக குஷ்பு கூறியிருக்கிறாரே..?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.

அவரைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர். தி.மு.க தலைவருடன் நட்பு பாராட்டக்கூடியவர். அப்படி இருக்கும்போது நாங்கள் அவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?" என்றார்.

உண்மையில் தோல்வி பயம் இல்லை என்றால் உதயநிதி, "மக்களுக்கு தி.மு.க மீது நம்பிக்கை உள்ளது, எங்கள் கொள்கை அத்தகையது, எங்கள் தேர்தல் அறிக்கை இன்றைய மக்கள் தேவை" என நம்பிக்கையுடன் கூறியிருப்பார்.

திரு.ரஜினிகாந்த் அவர்களின் மீதுள்ள பயத்தில் அவர், "தி.மு.க தலைவரின் நண்பர் எனவே நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்" என கூறியிருப்பது பயத்தின் வெளிப்பாடு என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News