அடிப்படையே இல்லாத பிக்பாஸ்.. தடை செய்வது அவசியம்.. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.!
அடிப்படையே இல்லாத பிக்பாஸ்.. தடை செய்வது அவசியம்.. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி.!
By : Kathir Webdesk
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 சீசன்களை தாண்டி தற்போது 4வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தி, தெலுங்கு என்று பலமொழிகளில் பிக்பாஸ் ஒளிபரப்பாகி வந்தாலும் அரசியல் காரணமாக தற்போது தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறலாம்.
அதிமுக மீது கடுமையான விமர்சனம் வைத்து வருவதால் விஜய் டிவியில் கமல்ஹாசன் பங்கேற்று நடத்தி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை முதலமைச்சரும், அமைச்சர்களும் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அந்நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் பா.வளர்மதியும் அதையே சொல்கிறார். அருவருப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்கிறார்.
மேலும் இது பற்றி அவர் கூறியதாவது: நாடகம், சினிமா, கூத்து என்றால் அடிப்படையில் ஒரு கதை இருக்கும். பாட்டு, சண்டை இருக்கும். ஆனால், பிக்பாஸில் என்ன அடிப்படை இருக்கிறது. மக்களும் அதைப்போய் ஏன் தான் பார்க்கிறார்களோ என்று தெரியவில்லை.
இனிமேல் ஆவது மக்கள் அந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பது நல்லது. கலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் அந்த நிகழ்ச்சியால் பல குடும்பங்கள் கெட்டுப்போகின்றன. அதனை முழுவதுமாக தடை செய்துதான் ஆகவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.