Kathir News
Begin typing your search above and press return to search.

சுடுகாட்டுக்கு பின்புறம் உதயநிதியை ரவுண்டு கட்டிய மக்கள் - சென்னையில் அலறிய பட்டத்து இளவரசர்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அடிப்படை வசதிகள் எங்கே என கேட்டு சென்னையில் மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சுடுகாட்டுக்கு பின்புறம் உதயநிதியை ரவுண்டு கட்டிய மக்கள் - சென்னையில் அலறிய பட்டத்து இளவரசர்

Mohan RajBy : Mohan Raj

  |  26 Jan 2023 12:30 PM GMT

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அடிப்படை வசதிகள் எங்கே என கேட்டு சென்னையில் மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவில் பட்டாசு இளவரசர் என அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ'வாகி மிக குறுகிய காலத்திலேயே மந்திரியாகிவிட்டார். தற்பொழுது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் போது உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் பத்தாவது இடம் கொடுக்கப்பட்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

எங்கு சென்றாலும் விளம்பரம்! எங்கு சென்றாலும் பேனர்கள்! முரசொலி முழுவதும் உதயநிதி படம்! உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்! உதயநிதி ஸ்டாலின்! திமுகவினர் தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் அவர்களை பாராட்டுவது ஒன்றே குறிக்கோள் என செயல்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னை ராயபுரம் மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூலகொத்தளம் பகுதி சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை இட்டு அடிப்படை வசதிகளை செய்து தரக்கூடிய போராட்டம் நடத்திய விவகாரம் அறிவாலய வட்டாரத்தை சற்று வேர்க்க வைத்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சரை அதுவும் திமுக பட்டத்து இளவரசர் என கொண்டாடப்படும் உதயநிதி ஸ்டாலினை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் வேறு நடந்துள்ளது திமுகவினரை தண்ணீர் குடிக்க வைத்துள்ளது.

சென்னை மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவுச்சின்னத்திற்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் உதயநிதி வீரவணக்கம் செலுத்துவதற்காக மொழிப்போர் தியாகி தாளமுத்து, நடராஜன் நினைவிடத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து அருகே உள்ள மற்றொரு மொழிப்போர் தியாகியாக டாக்டர் தர்மாம்பாள் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மூலக்கொத்தளம் இடுகாட்டுக்கு பின்புறத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த பெண்கள் திடீரென முற்றுகையிட்டனர். 90க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி செய்த தர கோரி உதயநிதி ஸ்டாலினை முற்றுகையிட்டனர் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதி செய்து தரவில்லை எனவும் கழிப்பிடம், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட தேவைகள் என்னவாச்சு என கோபத்தில் முற்றுகையிட்டனர். உதயநிதியின் பாதுகாவலர்கள் பயத்தில் உதயநிதியை பாதுகாத்தனர்.

உதயநிதிக்கு பாதுகாப்பு கொடுத்து மக்களை கட்டுப்படுத்த முயன்றனர் பாதுகாவலர்கள். பின்னர் அரை மணி நேர சலசலப்பிற்கு பின்னர் மக்களிடம் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுங்கள் என கேட்டதால் மக்கள் சமாதானமடைந்தனர்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரும் இல்லை என்ற இன்று உதயநிதியின் நிலை ஆபத்தாக முடிந்திருக்கும். மேலும் வேறு ஏதும் அசம்பாவிதம் நடந்து விடுமோ என பொதுமக்கள் உதயநிதி ஸ்டாலினை நெருங்காமல் தடுத்து நிறுத்தி அவரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர் அதிகாரிகள். அமைச்சர் உதயநிதியை மக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சிக்கு வந்து 20 மாதத்திலேயே அதுவும் தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே முதல்வர் பையனை முற்றுகையிட்டு பொதுமக்கள் எங்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என கேட்டுள்ள விவகாரம் திமுக அரசு விளம்பரத்தில் மட்டும்தான் செயல்படுகிறது களத்தில் ஒன்றும் இல்லை என முகத்தில் அடித்தாற்போல் திமுகவிற்கு உண்மையை விளக்கியுள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.


Source - Oneindia Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News