Kathir News
Begin typing your search above and press return to search.

"சில ஆடுகள்தான் உள்ளது, தி.மு.க., அமைச்சர்கள் போல ஊழல் செய்து கொடுக்க எதுவுமில்லை!" - பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு அண்ணாமலை பதிலடி!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.

சில ஆடுகள்தான் உள்ளது, தி.மு.க., அமைச்சர்கள் போல ஊழல் செய்து கொடுக்க எதுவுமில்லை! - பி.ஜி.ஆர். நிறுவனத்திற்கு அண்ணாமலை பதிலடி!

ThangaveluBy : Thangavelu

  |  27 Oct 2021 4:27 AM GMT

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தமிழக அரசியலில் பெரும் புயலை கிளப்பியது.


அதாவது நலிவடைந்துள்ள நிலையில் இருக்கும் ஒரு மின்நிலையத்தை, ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் வாங்கி அதன் வாயிலாக ரூ.5,000 கோடிக்கு மின்சாரம் விற்க, தமிழக மின்வாரியத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். ஆளுங்கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களும் லாபத்தை ஈட்டுவதற்காகத்தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது.


மேலும், எந்த நிறுவனம் எந்த அமைச்சர் என்ற பெயரை தற்போது வெளியிட விரும்பவில்லை. திரும்பவும் 2006, 11 பாதைக்குப் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படிப் போகும்போது, பாஜகவுக்கு வேறு வழியில்லை, ஒப்பந்தப் பேச்சு பற்றி எங்களிடம் உள்ள ஆவணங்களை பொதுமக்கள் முன்னர் வெளியிடுவோம் என பேசியிருந்தார். அது மட்டுமின்றி ஆதாரம் இருந்தால் அண்ணாமலை வெளியிட அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருந்தார். அதற்கு பதிலடியாக அடுத்த அரை மணி நேரத்தில் மின்சார வாரியம் சார்பில் பண பட்டுவாடா பற்றிய ஆதாரங்களை பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். இந்த ஆதாரம் திமுகவை திக்கு முக்காட செய்தது. மேலும், மின்சாரத்துறையில் ஊழல் நடக்கியது உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில்பாலாஜி ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்நிலையில், பிஜிஆர் நிறுவனத்திற்கு எதிராகவும் அண்ணாமலை கருத்து கூறியிருந்தார். இதனிடையே அண்ணாமலை 500 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். பிஜி இது பற்றி அண்ணாமலைக்கு அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸில் பிஜிஆர் நிறுவன இயக்குநர் ரமேஷ் குமார் பற்றிய ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டு அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதால் 500 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.


இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த அண்ணாமலை 'சார், 500 கோடி ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கின்றீர்கள். நான் ஒரு சாதாரண விவசாயி. என்னிடம் இருப்பது சில ஆடுகள் மட்டும்தான். (அறிவாலய) தி.மு.க அமைச்சர்களைப் போல ஊழல் செய்து கொடுப்பதற்கு எதுவுமில்லை. நம்முடைய நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது. சந்திப்போம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News