பவானிபூர் தொகுதியில் குறைவான அளவே வாக்குப்பதிவு! மம்தாவை மக்கள் நம்பவில்லையா?
கடந்த சட்டமன்ற தேர்தலில் நந்திகிராமில் மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டு 2 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்தார். இதனிடையே முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். தற்போது முதலமைச்சராக தொடர வேண்டும் என்றால் மீண்டும் அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வாக வேண்டும்.
By : Thangavelu

அதன்படி பவானிபூர் சட்டமன்ற தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக வேட்பாளர் 41 வயதான பிரியங்கா திப்ரேவால் என்ற வழக்கறிஞர் தேர்தலில் நின்றுள்ளார். தற்போது மீண்டும் மம்தாவுக்கு மிகவும் போட்டியாக இவர் இருப்பார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறுகின்றனர்.
இந்நிலையில், பரபரப்பான சூழலில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. மொத்தம் 6 லட்சத்து 97 ஆயிரத்து 164 வாக்காளர்கள் உள்ளனர். கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நடைமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த சட்டமன்ற தேர்தலில் இருந்த வரவேற்பு போன்று இந்த முறை மம்தாவுக்கு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.
மாலை 5 மணி நிலவரப்படி 53.32 சதவீத வாக்கு மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் எப்படியிருக்கும் என்பது புரியாத புதிராக அமைந்துள்ளது. மீண்டும் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை சந்திப்பாரா என்ற பேச்சுகளும் எழுந்துள்ளது.
Source: TopNews
Image Courtesy: ANI