Kathir News
Begin typing your search above and press return to search.

'பெரியப்பா!! காப்பாத்துங்க பெரியப்பா!!' காலில் விழுந்த உதயநிதி - மு.க.அழகிரியிடம் ஸ்டாலின் குடும்பம் சரண்டர் பின்னணி

'பெரியப்பா!! காப்பாத்துங்க பெரியப்பா!!' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரி காலில் விழுந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியப்பா!! காப்பாத்துங்க பெரியப்பா!! காலில் விழுந்த உதயநிதி  - மு.க.அழகிரியிடம் ஸ்டாலின் குடும்பம் சரண்டர் பின்னணி

Mohan RajBy : Mohan Raj

  |  19 Jan 2023 3:06 AM GMT

'பெரியப்பா!! காப்பாத்துங்க பெரியப்பா!!' என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரி காலில் விழுந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தி.மு.க'வில் தென்மண்டல அமைப்புச் செயலாளர் என்ற பதவியில் மிகப்பெரும் ஆளுமையுடன் வலம் வந்த கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், தற்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அண்ணனுமான மு.க.அழகிரி தென் மாவட்டங்களான மதுரை முதல் கன்னியாகுமரி வரையிலான பகுதிகளில் கிட்டத்தட்ட அரசன் போலவே கட்டி ஆண்டு வந்தார். தி.மு.க'வில் தென் மாவட்டங்களில் ஏதாவது நிகழ்வுகள் நடக்க வேண்டும் என்றால் அது அழகிரி இன்றி நடக்காது, தமிழகத்தில் 'இடைத்தேர்தல் வெற்றி ஃபார்முலாவை' உருவாக்கிய அரசியல் ஆளுமை மு.க.அழகிரி.

50 முதல் 10 பேர் குழுமியுள்ள இடத்தில் இருந்தால் ஸ்டாலின், 30 முதல் 50 பேர் குழுமியுள்ள இடத்தில் இருந்தால் அது அழகிரி என மு.க.அழகிரி அவர்களின் ஆளுமை பற்றி ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களே புகழ்ந்துள்ளார்.

ஒவ்வொரு முறை இடைத்தேர்தல் நடக்கும் பொழுதும் அழகிரி அங்கு முகாமிட்டார் என்றால் அந்த இடைத்தேர்தலில் திமுக அவர் சொல்லும் வாக்கு வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறும். திருமங்கலம் தேர்தல் ஃபார்முலா என தமிழக அரசியலில் 2005 முதல் 2011 வரையிலான காலகட்டத்தில் அவர் உருவாக்கிய ஃபார்முலாவை இன்று வரை இடைத்தேர்தல்களில் அலுங்காததி`ஆளுங்கட்சி உபயோகித்து வருகிறது.

இந்த நிலையில் முன்னாள் தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அழகிரி மற்றும் ஸ்டாலின் ஆகிய இருவருக்குமான பனிப்போர் வெடித்தது. ஒரு கட்டத்தில் அழகிரி என தனி பிரிவு ஸ்டாலினுக்கு என தனி பிரிவும் உருவானது, எனவே அழகிரி மற்றும் ஸ்டாலின் இடையிலான பனிப்போரில் தி.மு.க இரண்டாக உடைந்து விடுமோ என மூத்த தலைவர்கள் மத்தியில் அச்சம் நிலவியதால் மூத்த தலைவர்களாக இருந்த பேராசிரியர் அன்பழகன், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு போன்றோர் சமாதானமாக செல்லும்படி இருவரிடம் சமாதானம் பேசினார்கள்.

இன்னும் சில அரசியல் காரணங்களின் விளைவாக தி.மு.க மு.க.ஸ்டாலின் கையில் வந்தது, அதனைதொடர்ந்து மு.க.ஸ்டாலின் முதல்வர் பதவியையும் கைப்பற்றினர். அழகிரி தென்மண்டல அமைப்பு செயலாளார் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

பின்னர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த அழகிரி அவர்களுக்கு 'அரசியலில் அஸ்தமனம் என்பதே இல்லை, மீண்டும் வாருங்கள்' என ரஜினிகாந்தை ஒருமுறை பிறந்த நாள் வாழ்த்து கூறியதும் பரபரப்பாக பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் கடந்த முறை தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் இதுவரை அழகிரியை வெற்றி பெற்ற முதல் நேரில் சென்று பார்க்கவில்லை. பின்னர் சமீபத்தில் அமைச்சரான உதயநிதி ஸ்டாலினும் தனது பெரியப்பா என்ற முறையில் அழகிரியைச் சென்ற நேரில் பார்த்து ஆசீர்வாதம் எதுவும் வாங்கவில்லை. ஸ்டாலின் பதவி ஏற்ற நிகழ்வில் கூட அழகிரியின் மகன் துரை தயாநிதி மட்டுமே வந்து கலந்து கொண்டார் அப்போது துரை தயாநிதி மற்றும் உதயநிதி கட்டியணைத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்நிலையில் மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேடு, திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வருகைபுரிந்த விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வணிகவரி மற்றும் பத்தரவு பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர். அதனைத்தொடர்ந்து திடீரென அழகிரி வீட்டிற்கு சென்ற உதயநிதி ஸ்டாலின் தனது பெரியப்பா மு.க.அழகிரிக்கு பொன்னாடை போர்த்தினார்.

வீட்டை விட்டு வெளியே வந்து வரவேற்ற மு.க.அழகிரி மற்றும் அவரது மனைவி காந்தி அழகிரி மற்றும் குடும்பத்தினர் உதயநிதியை வீட்டின் உள்ளே அழைத்து சென்று வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின், 'அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அலங்காரநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண மதுரைக்கு வந்தேன். மதுரையில் பெரியப்பா அழகிரி சந்தித்து அவரிடம் ஆசியை பெறுவதற்காக வந்துள்ளேன். அவரும் என்னை வாழ்த்தி உள்ளார் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

கட்சி குறித்து பேசினீர்களா என கேட்ட கேள்விக்கு அழகிரி உடனடியாக 'நான் கட்சியில் இல்லை என்னிடம் இந்த கேள்வி கேட்கலாமா?, என் தம்பி மகன் என்ற முறையில் ஆசீர்வாதம் வாங்க வந்துள்ளார். அன்பின் மகேஷம் என் பிள்ளை தான் இருவரையும் வாழ்த்தியது எல்லையில்லாத மகிழ்ச்சியாக உள்ளது, என் தம்பி முதலமைச்சராக உள்ளார், இவர் அமைச்சராக உள்ளார் அதைவிட சந்தோஷம் வேறு என்ன இருக்கிறது?' என கூறியுள்ளார்.

மு.க.அழகிரியிடம் தி.மு.க'வில் மீண்டும் உங்களை எதிர்பார்க்கலாமா என்ற கேள்விக்கு 'அதை அவர்களிடம்தான் கேட்க வேண்டும்' என சட்டென்று பதிலாக முடித்துக் கொண்டார்.

தற்பொழுது தி.மு.க'வில் கனிமொழி தலைமை வேண்டும் என கடந்த சில நாட்களாக குரல்கள் மெல்ல அதிகரித்து வருகின்றன. மறுபுறம் சபரீசன் அதிகாரிகள் மற்றும் ஆட்சியர்கள் வட்டாரத்தில் நிர்வாகத்தில் தலையீடு அதிகம் இருப்பதால் சபரீசனுக்கான ஒரு அணியும், கனிமொழிக்கான ஒரு அணியும் உருவாகும் சூழல் உருவாகியுள்ளது. இதை திமுகவில் உள்ள சில தலைவர்களே மறைமுகமாக பேசி வருகின்றனர்.

இந்த சூழலில் இதுபோன்று எங்கே மு.க.அழகிரி அணி என மீண்டும் தனி ஒரு அணி உருவாகிவிடுமோ என பயந்து தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று தனது பெரியப்பவை பார்த்துள்ளார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும் கனிமொழி அணி உருவாக்கத்தையும், சபரீசன் அணி ஏற்கனவே உருவாகி இருப்பதையும் சமாளிக்க தற்பொழுது உதயநிதி மற்றும் ஸ்டாலின் குடும்பத்தாருக்கு மு.க.அழகிரியின் உதவி கண்டிப்பாக தேவைப்படும் அப்படி மு.க.அழகிரி உதவி தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் பெருவாரியான ஆதரவு ஸ்டாலின் குடும்பத்திற்கு கிடைக்கும் என்பதால் தற்பொழுது மு.க.அழகியின் குடும்பத்தாரிடம் ஒட்டி உறவாட இந்த பயணம் எனவும் கருதுகின்றனர்.

இது ஒரு புறம் இருக்கையில் மறுபுறம் கடந்த கனிமொழியின் பிறந்தநாளுக்கு தலைமை ஏற்க வரவேண்டும் என கூறி போஸ்டர்கள் அடிக்கப்பட்டது முதல் நம் தமிழர் கட்சியின் சீமான் நாம் தமிழர் கட்சியின் சீமான் ஏன் கனிமொழி தலைவராக வரக்கூடாது என்ற கேள்வி வரை கனிமொழி மீண்டும் திமுக தலைவரானால் கட்சியின் திராவிட கொள்கை மற்றும் கடவுள் மறுப்பு கொள்கையில் உறுதியாக இருக்கும் எனவும் கட்சியில் இருக்கும் கொள்கைவாதிகளால் நம்பப்படுகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.

எப்படியோ 'பெரியப்பா..!! காப்பாத்துங்க பெரியப்பா!!' என உதயநிதி சென்று காலில் விழுந்தது அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் மீண்டும் அரசியல் ஆசை துளிர் விட செய்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News