Kathir News
Begin typing your search above and press return to search.

என்ன தகுதி இருக்கு தி.மு.க'விற்கு பா.ஜ.க'வுடன் கூட்டணி வைக்க? - அண்ணாமலை சாடல்

பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதற்கு திமுகவுக்கு தகுதி கிடையாது திருச்சியில் அண்ணாமலை பேட்டி

என்ன தகுதி இருக்கு தி.மு.கவிற்கு பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க? - அண்ணாமலை சாடல்
X

KarthigaBy : Karthiga

  |  19 Aug 2022 1:15 PM IST

பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பதற்கு தி.மு.கவுக்கு தகுதி கிடையாது என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை திருச்சியில் கூறினார்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ் உடன் சமரசம் செய்து கொள்வதற்கு மற்றும் கூட்டணி வைப்பதற்கு குடும்ப ஆட்சியில் இருக்க கூடாது. ஊழலற்ற அரசு மற்றும் மக்களுக்கு நல்லாட்சி புரிய வேண்டும் இவை மூன்றுமே இல்லாததால் அதற்கு அருகதை இல்லை என்பதை முதலமைச்சர் உணர்ந்துள்ளார்.

பா.ஜ.க உடன் தி.மு.க ககூட்டணி வைப்பதற்கு எக்காலத்திலும் ஒரு தகுதியும் கிடையாது.தமிழக நிதி அமைச்சர் பேசுவதற்கு ஆதாரம் மற்றும் அர்த்தம் இருக்க வேண்டும். இலவசங்களால் தமிழகம் முன்னேறி இருக்கிறதா என்று அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இலவசம் கொடுப்பதால் தமிழகத்தில் வளர்ந்தவர்கள். கோபாலபுரம் குடும்பத்தினர்.

கமிஷனால் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே லாபம் கடந்த 14ஆம் தேதி வரலாற்றிலேயே அதிக பட்சமாக மது விற்பனை நடைபெற்றது. நிதி சுமையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அதே நேரம் வாங்கிய கடனை முறையாக செலுத்தவில்லை.


ஆட்சிக்கு வந்தபோது ஒரு லட்சம் கோடி கடன் பெற்ற நிலையில் தற்போது ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடி கடன் கேட்டுள்ளனர். எந்த அடிப்படையில் இது முன்னேறிக் கொண்டிருக்கும் அரசு என்றும் திராவிடமாடல் அரசு என்று முதல் அமைச்சர் கூறுகிறார் என்பது தெரியவில்லை.

இலங்கையில் ஒரே குடும்பத்தின் கையில் ஆட்சி சென்று நிதி நிலைமை திவாலாகி அவர்கள் அனைவரும் இலங்கையை விட்டு ஓடும் நிலை ஏற்பட்டது. தமிழகத்தில் குட்டி இலங்கை போல ஆட்சி நடைபெற்று வருகிறது.ஆனால் அரசை தாண்டி தமிழக மக்கள் பொருளாதார அடிப்படையில் வளர்ச்சி பெற்று கொண்டிருப்பதால் இது தெரியவில்லை.


ராகுல்காந்தி ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு வேஷம் போடுகிறார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் காங்கிரஸ் கட்சியை அதில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்கிறார்கள் இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News