பள்ளப்பட்டிக்கு பா.ஜ. வண்டி போகும்.. அரவக்குறிச்சி வேட்பாளர் அண்ணாமலை அதிரடி பேட்டி.!
கரூர் மாவட்டம், அவரக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதிலிருந்து திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் பயம் காரணமாக பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போடுகின்றர்.

கரூர் மாவட்டம், அவரக்குறிச்சி தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதிலிருந்து திமுக கூட்டணியை சேர்ந்தவர்கள் பயம் காரணமாக பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போடுகின்றர்.
இதனிடையே அரவக்குறிச்சி தொகுதிகுட்பட்ட பள்ளப்பட்டி என்ற ஊரில் முஸ்லீம்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பெண்கள் அவரது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கின்றனர். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத திமுகவினர், ஜமாத் அமைப்பை தூண்டிவிட்டு, அவர்கள் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
அதில், அண்ணாமலை பிரச்சாரத்திற்கு முஸ்லீம் பெண்கள் யாரும் கலந்து கொள்ளக்கூடாது என்று கண்டிப்புடன் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக பாஜக வேட்பாளர் அண்ணாமலை அதிரடி பேட்டி அளித்துள்ளார்.
அவரக்குறிச்சியில் உள்ள பள்ளப்பட்டி, இந்தியா அரசியல் அமைப்பு சட்டத்திற்கு கீழ்தான் உள்ளது. எனவே பாகிஸ்தானில் ஒன்றும் இல்லை, நான் பள்ளப்பட்டிக்கு சென்று பெண்கள் மற்றும் ஆண்களிடம் வாக்கு சேகரிப்பேன் எனறு அதிரடியாக பேட்டியளித்துள்ளார்.
மேலும், யார் தடுத்தாலும் பள்ளப்பட்டிக்கு பாஜக வண்டி செல்லும் என்றும் கம்பீரத்துடன் பேசியுள்ளார். அவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வருகின்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை 50 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அத்தொகுதி மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனால் பாஜக தொண்டர்கள் உற்சாகமுடன் தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர்.