என்ன பயந்துட்டியா குமாரு.. அந்த ஆண்டவனே நம்ம பக்கம்.. அரவக்குறிச்சி பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை அதிரடி ட்வீட்.!
தமிழகம் முழுவதும் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. இதனால் திமுக ஊடகமான சன்செய்தி உள்ளிட்ட பிற ஊடகங்கள் அண்ணாமலை வேட்புமனு ஏற்றுக்கொள்ள வில்லை என்று செய்திகள் போட்டுக்கொண்டிருந்தனர்.

திமுக வேட்பாளர் கொடுத்த புகாரில்தான் அண்ணாமலை வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியது. இதனால் அரவக்குறிச்சியில் பரபரப்பான காட்சிகள் அரங்ககேறியது.
இந்நிலையில், மாலை அண்ணாமலையின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
இதனிடையே அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் சன்செய்தியை குறிப்பிட்டு ஒரு பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.
என்ன பயந்துட்டியா குமாரு!
அந்த ஆண்டவனே நம்ம பக்கம்!
என்று குறிப்பிட்டிருந்தார். அவரது ட்வீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திமுக எப்போதுமே எதிர்மறையான கருத்துகளை மக்களிடம் திணித்து வருவது இனிமேல் எடுபடாது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.