அரவக்குறிச்சியில் 4,0000 வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன்: பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை அதிரடி உத்தரவு.!
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் சில தொகுதிகளில் பாஜக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.

By : Thangavelu
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதில் சில தொகுதிகளில் பாஜக தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
அந்த வகையில், தாராபுரம் தனி தொகுதியில் பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சியில் பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். அப்படி அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளர் அண்ணாமலை, தொகுதி மக்களுக்கு தான் அளித்துள்ள வாக்குறுதிகள்தான் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
அடுத்து வரும் 2026ம் ஆண்டுக்குள் அரவக்குறிச்சி தொகுதியில் 4 பெரிய மத்திய தொழிற்சாலைகளை கொண்டு வந்து 40,000 புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன். இது சத்தியம். அப்படி செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார்.
இது போன்று திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் வெளியிட முடியுமா என்று அரவக்குறிச்சி மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வரும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக அண்ணாமலை வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆவார் என தொகுதி மக்கள் அனைத்து தரப்பு மக்களும் பேசிக்கொள்கின்றனர்.
