பா.ஜ.க. ஒருபோதும் பதட்டம் ஏற்படுத்த முயலவில்லை.. வானதி சீனிவாசன் பேட்டி.!
கமல்ஹாசன் நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். திமுகவை சேர்ந்தவர்கள் போலீசார் மற்றும் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர் எனவும், தொடர் வன்முறை அரசியலை திமுக எடுத்து வருகிறது.
By : Thangavelu
கோவையில் பதட்டத்தை உருவாக்க பாஜக ஒருபோதும் முயலவில்லை என்று தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். காந்திபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
தாதா சாகிப் பால்கே விருது பெறும் நடிகர் ரஜினிக்கு பாஜக சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். பிரச்சாரத்தின்போது மைக் வேலை செய்யாததால் கமல்ஹாசன் டார்ச் லைட்டை வீசியது, அவருக்கு பொறுமை, இன்னும் பெறவில்லை என்பதனையே காட்டுகிறது.
கமல்ஹாசன் நீண்ட காலம் அரசியலில் பயிற்சி எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். திமுகவை சேர்ந்தவர்கள் போலீசார் மற்றும் பொதுமக்களை மிரட்டி வருகின்றனர் எனவும், தொடர் வன்முறை அரசியலை திமுக எடுத்து வருகிறது.
மேலும், கோவையில் கோவையில் பதட்டத்தை ஏற்படுத்துவதற்கு பாஜக முயற்சி செய்யவில்லை எனவும், திமுக ஆட்சி செய்தபோது தான் கோவையில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தது. அதற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் எனக் கூறினார்.
செருப்பு கடையில் கல் வீசியது யார் என்று தெரியாது. ஆனால் அதனை திமுகவினர் ஊதி பெரிதாக்குகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.