'பாரத் மாதா கி ஜே' கோஷமிட்ட பா.ஜ.க'வினர் - புரியாத பாஷை என கிண்டலடித்த கார்த்தி ப சிதம்பரம்
'பாரத் மாதா கி ஜே' என்ன கோஷமிட்ட பா.ஜ.க தொண்டர்களை பார்த்து ஏதோ புரியாத பாஷையில் பேசுவதாக கார்த்திக் சிதம்பரம் கிண்டல் செய்தது சர்ச்சையாகியுள்ளது.

By : Mohan Raj
'பாரத் மாதா கி ஜே' என்ன கோஷமிட்ட பா.ஜ.க தொண்டர்களை பார்த்து ஏதோ புரியாத பாஷையில் பேசுவதாக கார்த்திக் சிதம்பரம் கிண்டல் செய்தது சர்ச்சையாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கார்த்தி ப சிதம்பரம் பேட்டி கொடுத்து கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை வரவேற்க தொண்டர்கள் திரண்டு இருந்தனர்.
அந்த சமயம் திரண்டு இருந்த பா.ஜ.க தொண்டர்கள் வழக்கம்போல் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷங்களை எழுப்பினர். அப்பொழுது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக்கொண்டிருந்த கார்த்தி ப சிதம்பரம் அவர்கள் ஏதோ புரியாத மொழியில் பேசுவதாக கூறி கிண்டல் அடித்தார்.
'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷத்தை காங்கிரஸ் எம்.பி ஒருவர் இது மாதிரி கிண்டல் அடித்தது தற்பொழுது சர்ச்சையாகி வருகிறது. மேலும் பாரத் மாதா கீ ஜே கோஷத்தின் அருமை கூட தெரியாத அளவிற்கு ஒரு எம்.பி இருக்கிறார் காங்கிரஸில் என்பது விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.
