Kathir News
Begin typing your search above and press return to search.

தலைமை செயலகம் போன்று பா.ஜ.க. மாநாட்டு முகப்பு தோற்றம்: அசத்தும் கோவை தெற்கு மாவட்டம்!

தலைமை செயலகம் போன்று பா.ஜ.க. மாநாட்டு முகப்பு தோற்றம்: அசத்தும் கோவை தெற்கு மாவட்டம்!
X

ThangaveluBy : Thangavelu

  |  18 Jun 2022 7:42 PM IST

கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி என்கின்ற பெயரில் மாவட்ட மாநாடு கோவை ரோடு பி.கே.டி. பள்ளி எதிரில் உள்ள வாஜ்பாய் திடலில் நாளை (ஜூன் 19) மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் மாநில தலைவர் கே.அண்ணாமலை கலந்து கொண்டு பேரூரையாற்ற உள்ளார்.

இந்நிலையில், மாநாட்டு திடலின் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடைபெறுகிறது. மேடைகள் முகப்பு தோற்றம் தலைமை செயலகம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மாநாடு நடைபெறும் இடம் பொள்ளாச்சி நகரம் என்று பல்வேறு இடங்களில் தோரணங்களும் கட்டப்பட்டு நகரமே திருவிழா போன்று காட்சி அளிக்கிறது. வருகின்ற 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சென்னை கோட்டை வடிவத்தில் முகப்பு தோற்றத்தை அமைத்திருப்பதாக பா.ஜ.க. கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Maalaimalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News