இனி தமிழகத்தில் பா.ஜ.க வழிதான் சரி - இளம் தலைவரை இறக்க காங்கிரஸ் யோசனை !
இளம் தலைவரை இறக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.

அண்ணாமலையை பா.ஜ.க தலைவராக அறிவித்ததில் இருந்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் இளம் தலைவரை இறக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் கட்சி களம் இறங்கியுள்ளது.
தமிழக பா.ஜ.க'வின் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். 37 வயதான அண்ணாமலையை நியமித்ததில் இருந்து தமிழக பா.ஜ.க அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது, இடைவிடாத போராட்டங்கள், தமிழகத்தின் பிரச்சனைகளில் முதல் ஆளாய் இறங்கி மக்களுக்கு துணையாக இருப்பது, ஆளும் தி.மு.க'விற்கு சிம்ம சொப்பனமாக விளங்குவது போன்ற செயல்களில் பா.ஜ.க இறங்கி அடிக்க துவங்கியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியாக மக்கள் மத்தியில் பா.ஜ.க'வே விளங்குகிறது. இந்நிலையை கூர்ந்து கவனித்துள்ள காங்கிரஸ் கிட்டதட்ட மரணபடுக்கையில் உள்ளது போன்ற நிலையில் உள்ள காங்கிரஸ் கட்சியை பரபரப்பாக இயக்க இளம் தலைவர்தான் சிறந்த வழி என முடிவுசெய்துள்ளது.
இதனைதொடர்ந்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கு இம்முறை 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் ஒருவருக்கு வாய்ப்பு தர காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக டெல்லியில் முகாமிட்டு பலரும் காய் நகர்த்தி வருகின்றனர். இதையடுத்து செல்லக்குமார் எம்.பி., மாணிக்கம் தாகூர் எம்.பி., கார்த்திக் சிதம்பரம், எம்.பி., ஜோதிமணி எம்.பி. ஆகிய 4 பேரின் பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் ஏற்கனவே தொண்டர்களை விட காங்கிரஸ் கட்சியில் கோஷ்டியினர் அதிகம் என்பதால் இதனை எப்படி செயல்படுத்த முடியும் என்ற அச்சத்திலும் காங்கிரஸ் மேலிடம் உள்ளதாக தெரிகிறது.