Kathir News
Begin typing your search above and press return to search.

பிரதமரின் அண்ணன் மகளுக்கு பா.ஜ.க கவுன்சிலர் சீட்டு மறுப்பு - வைரலான செய்தி, குவியும் பாராட்டுகள்.!

பிரதமரின் அண்ணன் மகளுக்கு பா.ஜ.க கவுன்சிலர் சீட்டு மறுப்பு - வைரலான செய்தி, குவியும் பாராட்டுகள்.!

பிரதமரின் அண்ணன் மகளுக்கு பா.ஜ.க கவுன்சிலர் சீட்டு மறுப்பு - வைரலான செய்தி, குவியும் பாராட்டுகள்.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  6 Feb 2021 11:50 AM GMT

அகமதாபாத் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட பா.ஜ.க வேட்பாளராகக் கோரிய பிரதமர் நரேந்திர மோடியின் அண்ணன் மகள் சோனல் மோடிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு விட்டது. வேட்பாளர்களுக்கான புதிய விதிகளின் படி பா.ஜ.க வேட்பாளராகும் வாய்ப்பை சோனல் மோடி இழந்தார்.

அகமதாபாத் மாநகராட்சிக்கு (AMC) வரவிருக்கும் தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க அறிவித்தது. ஆனால் சோனல் மோடியின் பெயர் பட்டியலில் இல்லை. செவ்வாயன்று செய்தியாளர்களிடம் பேசிய சோனல் மோடி, AMC-யின் போடக்தேவ் வார்டில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட கோரியதாக தெரிவித்திருந்தார்.

35-40 வயதில் இருக்கும் சோனல் மோடி, பிரதமர் மோடியின் சகோதரர் பிரஹ்லாத் மோடியின் மகள். இவர் நியாய விலைக் கடை வைத்திருக்கிறார். குஜராத் நியாய விலை கடைகள் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார்.

வியாழக்கிழமை மாலை வெளியிடப்பட்ட பா.ஜ.க பட்டியலில் போடக்தேவ் அல்லது AMCயின் வேறு எந்த வார்டிலும் இருந்து வேட்பாளராகவும் சோனல் மோடியின் பெயர் இல்லை. விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியானவை என்று மாநில பா.ஜ.க தலைவர் சி.ஆர் பாடில் கூறினார்.

கட்சித் தலைவர்களின் உறவினர்களுக்கு வரவிருக்கும் தேர்தலில் வாய்ப்பு கிடைக்காது என்று சமீபத்தில் குஜராத் பா.ஜ.க அறிவித்தது. எவ்வாறாயினும், சோனல் மோடி, பிரதமரின் அண்ணன் மகளாக அல்லாமல் பா.ஜ.க தொண்டராக தேர்தல் டிக்கெட்டை கோரியதாகக் கூறினார்.

"நான் பா.ஜ.க தொண்டராக டிக்கெட் கோரினேன். பிரதமரின் உறவினராக அல்ல. எனக்கு டிக்கெட் வழங்கப்படாவிட்டாலும், அர்ப்பணிப்புள்ள தொண்டராக கட்சியில் சுறுசுறுப்பாக இருப்பேன்" என்று சோனல் மோடி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரஹலாத் மோடி தனது மகளின் முடிவை நியாயப்படுத்தினார். "என் குடும்பம் நரேந்திர மோடியின் பெயரை சுயநலனுக்காக ஒருபோதும் பயன்படுத்தவில்லை. நாங்கள் அனைவரும் எங்கள் சொந்த உழைப்பில் வாழ்கிறோம். நான் கூட ஒரு ரேஷன் கடை நடத்துகிறேன். நரேந்திர மோடி பிரதமரான பிறகு நானோ என் பிள்ளைகளோ அவரின் பங்களாவுக்கு கூட சென்றதில்லை" என்று பிரஹலாத் மோடி கூறியிருந்தார்.

பிரதமரின் சொந்த அண்ணன் மகளுக்கு கவுன்சிலர் வேட்பாளர் கூட கிடைக்காத இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. பலரும் இதை காங்கிரஸ் மற்றும் இதர பிற குடும்பக் கட்சிகளுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகிறார்கள்.

பா.ஜ.கவின் மாநில நாடாளுமன்ற வாரியம் வியாழக்கிழமை, ஆறு நகராட்சிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்தது.

அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர் ஆகிய நகராட்சிகளின் 576 பா.ஜ.க வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 1 ம் தேதி, ஆளும் கட்சி தலைவர்களின் உறவினர்களுக்கு டிக்கெட் வழங்கப்படாது என்று பா.ஜ.க கூறியிருந்தது. மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட கட்சி தொண்டர்களையும், மூன்று முறை பதவி வகித்தவர்களையும் கவுன்சிலர் வேட்பாளாளர்களாக பரிசீலிக்க மாட்டோம் என்றும் பா.ஜ.க கூறியிருந்தது.

6 நகராட்சிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 21 ம் தேதி நடைபெறும். 81 நகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள் மற்றும் 231 தாலுகா பஞ்சாயத்துகளுக்கு வாக்களிப்பு பிப்ரவரி 28 அன்று நடைபெறும்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News