Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த நாடகத்தை முதலில் நிறுத்துங்கள்: நீட் விவகாரத்தில் தி.மு.க.வை விளாசித்தள்ளிய நடிகை காயத்ரி ரகுராம்.!

நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவை, நடிகையும், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த நாடகத்தை முதலில் நிறுத்துங்கள்: நீட் விவகாரத்தில் தி.மு.க.வை விளாசித்தள்ளிய நடிகை காயத்ரி ரகுராம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  14 July 2021 1:26 PM IST

நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக, தமிழக அரசால் அமைக்கப்பட்ட குழுவை, நடிகையும், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்துள்ளார்.

உச்சநீதிமன்றம் நீட் தேர்வை கொண்டு வந்தது. ஏழை, எளிய மாணவர்களும் மருத்துவர்களாக படித்து சேவையாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதனை தமிழகத்தில் தினமும் எதிர்த்து வருவது வேடிக்கையாக உள்ளது. திமுகதான் மாணவர்கள் மத்தியில் இரட்டை வேடத்தை போட்டுக்கொண்டு திரிந்து வருகிறது.

நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று போலியான வாக்குறுதியை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக தற்போது, நீட் தேர்வு குறித்து ஆயார்வதற்காக குழு அமைத்துள்ளோம் என்று பேசி வருகின்றது. இதனிடையே நீட் தேர்வு குறித்து ஆராய்வதற்காக அமைப்பதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது. எனவே ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்ததை எதிர்த்து பாஜக பிரமுகர் கரு.நாகராஜன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


ஆனால் திமுகவிற்கு வெற்றி கிடைத்தது போன்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தம்மட்டம் அடித்துக்கொள்வதை காணமுடிகிறது. இதனிடையே இன்று 165 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு முதலமைச்சர் ஸ்டாலினிடம் வழங்கியது.

இந்நிலையில், நீட் தேர்வு பற்றி ஆய்வு அறிக்கையை ஏ.கே.ராஜன் குழு சமர்பித்ததை குறிப்பிட்டு, திமுக அரசை நடிகையும், பாஜக பிரமுகரான காயத்ரி ரகுராம் விமர்சனம் செய்து ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், இந்த நாடகத்தை நிறுத்துங்கள். திமுக மாணவர்களை தவறாக வழிநடத்துவதோடு, தேர்வுக்கு ஊக்குவிக்கவில்லை என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News