அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு.!
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணியை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிட்டது. தற்போது அதே கட்சிகள் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தாக பாஜகவுக்கு 20 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு முறைப்படி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக சார்பில் அக்கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும், தேமுதிக கட்சியுடன் அதிமுக தலைமை பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் அக்கட்சியுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.