Kathir News
Begin typing your search above and press return to search.

கோயில் அறங்காவலர்கள் நியமனம்: தி.மு.க'வை விமர்சிக்கும் பா.ஜ.க தலைவர் எச்.ராஜா!

கோயில் அறங்காவலர்கள் நியமனம்:  தி.மு.கவை  விமர்சிக்கும்  பா.ஜ.க தலைவர் எச்.ராஜா!
X

ThangaveluBy : Thangavelu

  |  9 Jan 2022 11:06 AM GMT

தமிழக கோயில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் நடைபெறுகிறது என்று பாஜக தலைவர் எச்.ராஜா கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள் பேட்டியில் கூறியிருப்பதாவது: தற்போது உள்ள திமுக அரசு இந்து கோயில்களை முழுவதும் சட்ட விரோதமாக அழித்து விடுவதற்கு கங்கனம் கட்டி செயல்பட்டு வருகிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. கோயில் நகைகளை உருக்குவதும், கோயில் பணத்தில் கல்லூரிகளை கட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளது.

அதே சமயம் கோயிலில் அறங்காவலர் இல்லாமல் அதனை செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே தமிழக அரசு எந்த கோயில்களிலும் நிதி இருக்கக்கூடாது என்று செயல்பட்டு வருகிறது. ஏற்கனவே சொத்துக்கள், நிலங்களை 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. கோயிலில் ஒரு உதவி ஆணையர் அலுவலகத்தில் கம்பியூட்டர் கூட இல்லை. இதனை வைக்க குறைந்த பணமே செலவாகும். இப்பணிகளை கோயில் நிதியில் செய்யாமல், அந்த பணத்தை மீன் மார்க்கெட் வைப்பது மற்றும் இந்துக்களுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது.

மேலும், கோயில் அறங்காவலர்கள் நியமனத்தில் வெளிப்படை தன்மை இல்லாமல் நடைபெறுகிறது. தற்போதைய குழுவில் மகளிர், பட்டியல் இனத்தவர்களும் இடம்பெற வேண்டும். ஆனால் இது போன்ற விபரங்கள் விண்ணப்பங்களில் இல்லை. தற்போதைய விண்ணபங்களில் குறைபாடு இருப்பதாக அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இதில் இருந்தே தெரிந்து கொள்ளலாம், அறங்காவலர் ஆணையரும், அமைச்சரும் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றனர் என்பதை பார்க்க முடிகிறது.

மேலும், அறங்காவலர்களாக நியமிக்கப்படுபவர்கள் அரசியல் பின்னணி இருக்கக்கூடாது. தெய்வ பக்தி உடையவர்களே இருக்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. தற்போது திருட்டுத்தனமாக கரை வேட்டி கட்டியவர்கள் அறங்காவலர்களாக நியமிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source: Dinamalar

Image Courtesy:Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News