Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினி கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக இல்லை.. முன்னாள் மத்திய அமைச்சர் தகவல்.!

ரஜினி கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக இல்லை.. முன்னாள் மத்திய அமைச்சர் தகவல்.!

ரஜினி கட்சி தொடங்கும் பின்னணியில் பாஜக இல்லை.. முன்னாள் மத்திய அமைச்சர் தகவல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 Dec 2020 6:44 PM GMT

நடிகர் ரஜினி அரசியல் பிரவேசம் செய்வது பற்றிய தனது அறிவிப்பினை ட்விட்டர் வழியாக கடந்த 3ம் தேதி உறுதிப்படுத்தினார். மேலும் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனவரி மாதம் கட்சி துவக்கம், இந்த மாதம் 31ம் தேதி அறிவிப்பு என கூறியிருந்தார்.

அவரது வெளியிடப்பட்ட மற்றொரு செய்தியில், வர போகிற சட்டசபை தேர்தலில் மக்களுடைய பேராதரவுடன் வெற்றி பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மத சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்... அதிசயம்... நிகழும்.. எனவும் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து நடிகர் ரஜினி அரசியல் கட்சி தொடங்கி வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் முடிவையும் உறுதி செய்தார். இந்த அறிவிப்புக்கு பின்னர் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளதாவது: ரஜினி கட்சி தொடங்குவது மகிழ்ச்சி, நல்லவர்கள் அரசியலுக்கு வருவது நாட்டிற்கு மிகவும் நல்லது என்று கூறினார்.

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவதன் பின்னணியில் பாஜக இல்லை எனவும் கூறிய அவர், பாஜக எப்போதுமே பின்னணியில் இருக்காது. முன்னணியில் தான் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News