'வெற்றிக் கொடி ஏந்தி வெல்வோம் தமிழகம்' என்ற தலைப்பில் பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தை அக்கட்சி முன்னெடுத்து வருகிறது.
இந்நிலையில், பா.ஜ.க. பிரமுகரும், நடிகையுமான குஷ்பு நெல்லையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் பா.ஜ.க. மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு: ''கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழகத்திற்கு பிரதமர் மோடி பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்.
இதனால் தமிழகத்திற்கு யார் நன்மைகள் செய்வார்கள் என்று பொதுமக்கள் அறிவார்கள். அதிமுக, பாஜக கூட்டணி அமோக வெற்றிப்பெறும். மேலும், அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களும் பாதுகாப்பாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.