கோவை: சாமி தரிசனத்தை முடித்து யாத்திரையாக சென்னை புறப்பட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!
தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பதவியேற்பதற்காக கோவையில் சாமி தரிசனம் செய்து விட்டு யாத்திரையாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பதவியேற்பதற்காக கோவையில் சாமி தரிசனம் செய்து விட்டு யாத்திரையாக சென்னைக்கு புறப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவராக வருகின்ற 16ம் தேதி அண்ணாமலை பொறுப்பேற்கிறார். அதற்காக இன்று கோவையில் இருந்து சாலை மார்க்கமாக சென்னை வரும் அண்ணாமலைக்கு வழி முழுவதும் பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்காக அக்கட்சி திட்டமிட்டுள்ளது.
அதன்படி இன்று கோவையில் இருந்து புறப்படும் அண்ணாமலைக்கு பல்லடம், திருப்பூர், பெருந்துறை மற்றும் வழி முழுவதும் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பு அளிப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். இதனிடையே இன்று இரவு திருச்சியில் தங்கும் பாஜக தலைவர் அண்ணாமலை மீண்டும் நாளை காலை சென்னை புறப்பட்டு செல்கிறார்.
திருச்சியில் இருந்து புறப்பட்டு பெரம்பலூர், விழுப்புரம், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் வரவேற்பை பெற்று இரவு தாம்பரத்தில் தங்குகிறார். மீண்டும் நாளை மறுநாளான 16ம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு பல்லாவரம், ஆலந்தூர் சைதாப்பேட்டை வழியாக மதியம் தி.நகரில் அமைந்துள்ள கமலாலயம் வருகிறார்.
அங்கு அவர் மதியம் 2 மணிக்கு தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுக் கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய பொதுச்செயலர் சி.டி.ரவி, தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மற்றும் மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
முதல் முறையாக பாஜக தலைவராக பொறுப்பேற்கும் ஒருவருக்கு கோவை முதல் சென்னை வரை வரவேற்பு அளிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.