'ஆதீனத்தை பல்லக்கில் தூக்குவதை என்ன கோபாலபுர குடும்பத்தை தி.மு.க'வினர் தூக்குவது போல் நினைத்தார்களா?' - சீறும் அண்ணாமலை
'தர்மபுரம் ஆதீனத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன்' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாக தெரிவித்துள்ளார்.

By : Mohan Raj
'தர்மபுரம் ஆதீனத்தை தோளில் சுமக்க நானே நேரில் செல்வேன்' என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அதிரடியாக தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் நடக்கவுள்ள பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் ஆதீனம் குருமகாசன்னிதானம் அவர்களை பல்லக்கில் அமர வைத்து மனிதர்கள் தூக்கி செல்ல திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததை குறிப்பிட்டு மயிலாடுதுறை கோட்டாட்சியர் தடை விதித்துள்ளார்.
இந்த விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது, கடவுளே இல்லை என்று கூறும் திராவிடர் கழகத்தினர் இந்த விவகாரத்தில் தலையிடலாமா என பல இடங்களில் சர்ச்சைகள் எழும்பிய நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் ஆதீனத்தை பல்லக்கில் அமர வைத்து தூக்கிச் செல்லக் கூடாது என மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தர்மபுரம் பட்டின பிரவேசத்திற்கு தடை விதித்துள்ள விவகாரம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியதாவது, 'தருமபுரம் ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான பட்டினப்பிரவேசம் மீதான தடை தமிழக நாகரீகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது ஆதீனத்தை பட்டின பிரவேசத்தின் போது தோளில் சுமக்க நானே நேரில் வருவேன் என்பதை தமிழக அரசுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு கோரிக்கை வைப்போம் கோபாலபுரம் குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கி சுமப்பது போல அல்ல இது! ஊழியம் மற்றும் குருவுக்கு செய்யும் சேவையிம் வேறு இதில் உள்ள வேறுபாடுகளை கூட அறியாதவர்கள் இந்த கோபாலபுரம் குடும்பத்தார் தமிழக பா.ஜ.க இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.
அண்ணாமலை இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்ததை தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
