Kathir News
Begin typing your search above and press return to search.

மிரட்டலுக்கு பணிய தி.மு.க. தலைவர்கள் வீட்டு வேலையாட்கள் இல்லை ! - அண்ணாமலை அதிரடி பேட்டி!

வழக்கு போடுவதாக கூறி (திமுக) தன்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மிரட்டலுக்கு பணிய தி.மு.க. தலைவர்கள் வீட்டு வேலையாட்கள் இல்லை ! - அண்ணாமலை அதிரடி பேட்டி!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 Oct 2021 9:58 AM GMT

வழக்கு போடுவதாக கூறி (திமுக) தன்னை ஒரு நாளும் மிரட்ட வேண்டாம். மிரட்டலுக்கு பணிவேன் என்றும் நினைக்க வேண்டாம் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட்டு ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் பணியை பாஜக செய்கிறது. அப்படித்தான் மின்துறை ஊழல்கள் குறித்து கூறினேன். மின்சாரம் சப்ளை செய்யும் தனியார் நிறுவனங்களுக்கு அதற்கான பணம் கொடுக்கும்போது கமிஷன் பெறப்படுகிறது என்று கூறினேன். அதற்கு தேவையான ஆவணங்களையும் கேட்டனர். இதன் பின்னர் பணம் கொடுத்த ஆவணங்களையும் வெளியிட்டேன்.

இதனை தொடர்ந்து ஆதாரம் இதுதானா என்று கேள்வி எழுப்புகின்றனர். செய்கின்ற தவறை திருத்திக் கொள்ளாமல் விமர்சனத்துக்கு பதில் விமர்சனமாக கேள்வியை எழுப்பி அதன் மூலம் பிரச்சனையை மூடி மறைக்க முயல்கின்றனர். அதே போன்றும் போக்குவரத்துத் துறை ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையின்போது இனிப்புகள் வழங்க கமிஷன் தொகை பேசி அதன் மூலமாக அதிகவிலை கொடுத்து தனியாரிடம் வாங்கப் பார்க்கின்றனர் எனவும் குறிப்பிட்டேன்.


இதன் பின்னர் தவறு என்றது பிரச்சனையாகி விட்டது. உடனே அரசு நிறுவனமான ஆவினில் வாங்குவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். அப்படி என்றால் அதில் முறைகேடு செய்வதற்கு தயாராக இருந்தனர் என்பது தானே பொருள்? தவறு நடக்க தடை போட்டு விட்டார் முதலமைச்சர் என்றதும் பாராட்டினேன். தவறு செய்யால் ஆட்சி செய்தால் அவர்களை பாராட்ட தயாராக உள்ளோம். செய்வது அனைத்துமே தவறு. முறைகேடு பற்றிய உண்மையை சொன்னால் கோபம் வருகிறது. இதற்காக மானநஷ்ட வழக்கு போடுவேன், 500 கோடி ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

இது போன்ற வழக்குக்கு எல்லாம் இந்த அண்ணாமலை பயப்படுவேனா. நீதிமன்றங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் என் மீது வழக்குப் போடட்டும். என்ன சொல்ல வேண்டுமோ அது பற்றி ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறேன். இப்படி மிரட்டினால் பயந்து ஓடுவதற்கும் ஒதுங்குவதற்கும் அண்ணாமலை திமுக தலைவர்கள் வீட்டு வேலை ஆள் அல்ல. மிகப்பெரிய இயக்கத்தின் மாநில தலைவன். எனவே திமுக ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு ஊழல் இல்லா தமிழகத்தை உருவாக்கு பாடுபடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar


Next Story
கதிர் தொகுப்பு
Trending News