100 கி.மீ பயணம்.. தன்னை பார்க்க வந்த மாற்றுத்திறனாளி தொண்டரை நெகிழ்ச்சி அடைய செய்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை.!
இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் ரகு. இவர் மாற்றுத்திறனாளி ஆவார். பாஜக தலைவராக பொறுப்பேற்ற கே.அண்ணாமலையை சந்திப்பதற்காக சுமார் 100 கி.மீ தனது இரண்டு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
By : Thangavelu

அப்போது, இதனை கவனித்த பாஜக தலைவர் கே.அண்ணாமலை, அவரது வாகனத்தின் அருகாமையில் சென்று அவரை வரவேற்றார். இது தொடர்பான புகைப்படங்களை தமிழக பாஜக முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இது பற்றி அந்த முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: நேற்று சோளிங்கரில் இருந்து சுமார் 100 கி.மீட்டருக்கு மேல் தன் இரண்டு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து கமலாலயம் வந்திருந்த திரு.ரகு அவர்களை, நமது மாநில தலைவர் கே.அண்ணாமலை அவர் இருந்த இடத்திற்கே வந்து வாகனத்தில் அமர்ந்திருந்தவரை சந்தித்த நெகிழ்வான தருணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.