உள்ளாட்சித் தேர்தல் குறித்து பா.ஜ.க. மாவட்டத் தலைவர்களுடன் அண்ணாமலை நாளை ஆலோசனை!
உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
By : Thangavelu
உள்ளாட்சித் தேர்தல் குறித்து பாஜக மாவட்டத் தலைவர்களுடன் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மற்றும் 28ம் தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனிடையே புதியதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறாமல் இருந்தது.
அதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதனால் உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
இந்நிலையில், பாஜக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நாளை காலை 10 மணிக்கு சென்னை, கமலாலயத்தில் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் வரப்போகின்ற உள்ளாட்சித் தேர்தலில் எப்படி பணியாற்றுவது மற்றும் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Source: News 7
Image Courtesy: Bjp
https://news7tamil.live/localbody-election-annamalai-discuess-to-bjp-district-leaders.html