Kathir News
Begin typing your search above and press return to search.

உளறிக் கொட்டிய தி.மு.க எம்.பி - பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.!

உளறிக் கொட்டிய தி.மு.க எம்.பி - பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.!

உளறிக் கொட்டிய தி.மு.க எம்.பி - பதிலடி கொடுத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை.!
X

Saffron MomBy : Saffron Mom

  |  8 Nov 2020 2:15 AM IST

தன்னுடைய சொந்த வார்த்தைகளாலேயே பலமுறை சிக்கலில் மாட்டிக் கொள்வதற்கு பெயர் பெற்ற தி.மு.க எம்.பி டாக்டர் செந்தில்குமார், மறுபடியும் தமிழ்நாடு பா.ஜ.க துணைத் தலைவர் அண்ணாமலையுடன் விவாதம் செய்கிறேன் என்று வாங்கிக் கட்டிக் கொண்டார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை சமீபத்தில் ஒரு பேரணியில் பேசிய பேச்சின் ஒரு பகுதியை கிண்டல் அடிக்கிறேன் பேர்வழி என்று ட்விட்டரில் கருத்து தெரிவிக்க தி.மு.க MP சென்றார்.

அந்தப் பேரணியில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சோழ ராஜ்ஜியத்தின் மேன்மையைப் பற்றியும் தெற்காசிய நாடுகளுக்கு இடையே கடலில் வழியறிந்து செல்ல ராஜராஜசோழன் ஆமைகளை பயன்படுத்தினார் என்றும் குறிப்பிட்டார். அவர் கூறுகையில் ராஜேந்திர சோழர் கம்போடியா, இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். ஒரு தி.மு.க உறுப்பினர் ஒரு விவாதத்தின் பொழுது ராஜராஜசோழன் எங்கும் செல்லவில்லை என்றும் நான் பொய் கூறுகிறேன் என்றும் கூறினார். அதற்கு நான் கூறுகையில், 'ஐயா நீங்கள் சுமத்ரா ஜாவா தீவுகளுக்கு செல்லுங்கள். அங்கே ராஜராஜசோழன் வந்ததற்கான தமிழ் கல்வெட்டுகள் உள்ளன என்று தெரிவித்தேன். அதற்கு அவர் என்னிடம் கேட்டா,ர் ராஜராஜசோழன் எவ்விதம் அங்கே சென்று இருப்பார் அப்பொழுது பெரிய கப்பல்கள் இல்லையே என்றார். அதற்கு நான் சொல்கிறேன், அவர் எப்படி சென்றார் என்று. தமிழர்களுடைய அறிவியல் அறிவை பாருங்கள் ஆமைகள் எப்பொழுதும் கடலை நோக்கியே செல்லும். சோழர்கள் ஆமைகளின் கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி தங்களுடைய கப்பல்களை வழி நடத்தினார்கள்' என்று கூறினேன்.


இதற்கு ட்விட்டரில் கருத்து தெரிவிக்க சென்ற தி.மு.க எம்.பி செந்தில்குமார், 'இது என்ன ஆமைக்கு வந்த சோதனை, பாவம் அந்த ஆமை' என்று கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு அறிவியல் ஆதாரங்களுடன் தக்க பதிலடி கொடுத்த அண்ணாமலை, 'தி.மு.க எம்.பி எதிலும் 'அரைகுறை' என்றும் ஒன்றிலும் நிபுணர் அல்ல' என்றும் பதில் கொடுத்தார்.



கம்போடியாவில் அங்கோர்வாட் கோவில்களில் உள்ள பிரம்மாண்டமான சிற்பங்களிலும், அந்த நாடுகளில் உள்ள கோவில்களின் கலைப் பொக்கிஷங்களையும் ஒரு ஒற்றுமையை பார்க்கமுடியும். இதில் முக்கியமானது என்னவென்றால் கடல் ஆமைகளுக்கு அங்கே ஒரு சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அங்கே உள்ள சிற்பங்கள் பலவும் கடல் ஆமைகளை ஏதாவது ஒரு வடிவங்களில் கொண்டுள்ளது. கடல் ஆமைகளுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கக் காரணம், கடல் பயணங்களில் அவைகளுக்கு இருக்கும் முக்கியத்துவம் தான். கடல் ஆமைகள் தாங்கள் பிறந்த கடற்கரையை மறப்பதே இல்லை. கடல் முழுவதும் பல ஆண்டுகளாக அவை சுற்றி அலைந்தாலும் தாங்கள் பிறந்த அதே கடற்கரையில் தான் அவை முட்டையிடும்.

சமீபத்திய ஆய்வுகளின் படி, கடல் ஆமைகள் கடல் நீரோட்டம் மற்றும் காந்த புலத்தைப் பயன்படுத்தி தாங்கள் பிறந்த இடத்தை நினைவு வைத்துக் கொள்வதாக அறியப்பட்டுள்ளது. சோழர்கள் இந்த திறனை பயன்படுத்தி கடலின் வழி கண்டுபிடித்து செல்ல பயன்படுத்தினர் என்றும் கூறப்படுகிறது.


தி.மு.க எம்.பி, ஒரு பள்ளி குழந்தை விளையாட்டில் தோற்று விட்டதை போல நடந்துகொண்டார்.இதற்கு அவர் பதிலளிக்கையில் இவையெல்லாம் வெறும் கட்டுக்கதைகள் என்றும் இதையெல்லாம் கேட்டாலே அந்த ஆமை தூக்கில் தொங்கும் என்றும் தெரிவித்தார்.


இவருக்கெல்லாம் அறிவியல் ஆதாரம் கொடுப்பது பிரயோஜனமில்லை என தெரிந்து கொண்ட அண்ணாமலை, 'உங்கள் கட்சியிலேயே நிறைய ஆமைகள் உள்ளன. நாங்கள் அவற்றை வைத்து சோதனை செய்து பார்ப்போம்' என்று கூறியவுடன் தி.மு.க எம்.பி வாயடைத்துப் போனார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News