தூது செல்ல நான் ரெடி.. மாமா ஸ்டாலின் அனுமதிப்பாரா? தயாநிதி மாறனுக்கு நெத்தியடி கொடுத்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை!
இதன் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ஆளும் கட்சி மட்டும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்தமாக அணை கட்டக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
By : Thangavelu
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வருகின்ற தண்ணீர் தடைப்பட்டுவிடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதன் காரணமாக தமிழக அரசியல் கட்சிகள் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்தமாக அணை கட்டக்கூடாது என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதனிடையே, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ஆகஸ்ட் 5ம் தேதி கர்நாடக அரசுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளார். இது பற்றிய தகவல் அறிந்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, யார் உண்ணாவிரதம் இருந்தாலும் கர்நாடகத்தில் மேகதாது அணை கட்டப்படுவது உறுதி எனக் கூறியிருந்தார்.
இது குறித்து திமுக எம்.பி., தயாநிதிமாறன், தமிழ்நாடு பாஜக போராட்டம் நடத்தினாலும், அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறிவரும் நிலையில், சுமூக தீர்வு காண்பதற்கு மாவீரன் அண்ணாமலையை தூதுவராக அனுப்புவோம் என்று பேசியிருந்தார்.
இந்நிலையில், தயாநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை அதிரடியான ஒரு ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய்தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்தபோது T20 விளையாட்டுப் போட்டியை ரசித்துக்கொண்டு இருந்த தயாநிதி மாறன் அவர்கள் மேகதாது அணை பற்றி கவலைப்பட்டமைக்கு மிக்க நன்றி. தங்கள் சிறப்பு விமானத்தை அனுப்பி வைத்தால் நம் மாநில ஏழை விவசாயிகளை அழைத்துக்கொண்டு தூது செல்ல நான் தயார் இதனை அவர் மாமா திரு.மு.க.ஸ்டாலின் அனுமதிப்பாரா? என்று பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலையின் ட்விட் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. சமூக வலைதளங்களில் இன்று டிரெண்டிங் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Source: Twiter
Image Courtesy:Bjp Twiter