Kathir News
Begin typing your search above and press return to search.

2024 தேர்தலுக்காக புதிய நிர்வாகிகளுடன் நாளை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முக்கிய ஆலோசனை - முழுவீச்சில் களமிறங்கும் புதிய அணி

வரும் 2024 இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது அந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக பாஜக தற்போது தயாராகி விட்டது

2024 தேர்தலுக்காக புதிய நிர்வாகிகளுடன் நாளை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முக்கிய ஆலோசனை - முழுவீச்சில் களமிறங்கும் புதிய அணி
X

Mohan RajBy : Mohan Raj

  |  9 May 2022 7:00 PM IST

வரும் 2024 இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்றது அந்த தேர்தலை எதிர்கொள்ள தமிழக பா.ஜ.க தற்போது தயாராகி விட்டது.

கடந்த இரு தினங்களுக்கு முன் புதிய நிர்வாகிகள் கொண்ட பட்டியலை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார், இந்த நிலையில் 39 பாராளுமன்ற தொகுதிகளில் 25 தொகுதிகள் குறிவைத்து தேர்தல் வியூகம் தற்போது பா.ஜ.க சார்பில் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.

அதன் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மதுரையில் நாளை 10'ம் தேதி பா.ஜ.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நடக்கும் கூட்டத்தில் தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் செயல்திட்டம் வகுத்து கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது பா.ஜ.க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற கட்சிகளை விட பா.ஜ.க ஒருபடி முன்னே தற்போது செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News