Begin typing your search above and press return to search.
கொரோனா விதிகளை மீறிய அமைச்சர்கள் மீது நடவடிக்கை தேவை: பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ஒரே ஆட்டோவில் பயணம் செய்த அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு மற்றும் எம்.பி. தயாநிதி மாறன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

By :

சென்னை, நுங்கம்பாக்கத்தில் பாஜக சார்பில் முன்களப் பணியாளர்களுக்கு நிவாரண பொருடங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல்.முருகன், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு விதிகளில் ஒரு ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஆனால் அமைச்சர்கள் மற்றும் எம்.பி. என்று மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
Next Story