Begin typing your search above and press return to search.
தேர்தலுக்குப் பின்னர் தி.மு.க என்ற கட்சியே இருக்காது: பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் பேட்டி!
ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார். கோவையில் நடந்த தாக்குதலில் பாஜக மீதான புகார் தவறானது. பிரதமர் மோடி வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவார் எனக் கூறினார்.

By :
நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் திமுக என்ற கட்சியே இருக்காது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஸ்டாலின் தோல்வி பயத்தில் இருக்கிறார். கோவையில் நடந்த தாக்குதலில் பாஜக மீதான புகார் தவறானது. பிரதமர் மோடி வரும் சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைவார் எனக் கூறினார்.
மேலும் அவர் பேசும்போது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வி பயம் காரணமாக உளறி வருகிறார். ஸ்டாலினின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் திமுக என்ற கட்சியே இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
Next Story