Kathir News
Begin typing your search above and press return to search.

கிறிஸ்துவர்களின் ஆதரவை பெற வடகிழக்கு மாநில பா.ஜ,க கிருஸ்துவ தலைவர்கள் தமிழகத்தில் முகாம்

கிறிஸ்தவர்களின் ஆதரவை பெறுவதற்காக வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

கிறிஸ்துவர்களின் ஆதரவை பெற வடகிழக்கு மாநில பா.ஜ,க கிருஸ்துவ தலைவர்கள் தமிழகத்தில் முகாம்

Mohan RajBy : Mohan Raj

  |  9 July 2022 8:32 AM GMT

கிறிஸ்தவர்களின் ஆதரவை பெறுவதற்காக வட கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க தலைவர்கள் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

லோக்சபா தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடங்களுக்கு மேல் இருக்கும் நிலையில் அதற்கான பணிகளை பாரதிய ஜனதா கட்சி இப்பொழுது துவங்கியுள்ளது, ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆதரவை பெறுவது மட்டுமல்லாமல் சிறுபான்மையினர் ஆதரவை பெறவும் வியூகம் வகுத்து வருகிறது.

ஜூன் 2,3 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழுவில் பேசிய பிரதமர் மோடி, 'வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிகள் அதிக அளவில் தென் மாநிலங்களுக்கு சென்று ஹிந்துக்கள் அல்லாத சிறுபான்மையினர் மத்தியில் சந்திப்பை ஏற்படுத்தி பேச வேண்டும்' என கூறினார்.

பல்வேறு துறைகளில் சிறுபான்மை சமுதாயத்தினரின் நலன்களை பாதுகாக்க மத்திய பா.ஜ.க அரச முன்னெடுத்துள்ள திட்டங்களை பற்றி அவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதனைத் தொடர்ந்து ஜூலை 4'ம் தேதி சென்னை வந்திருந்த மேகாலயா மாநில பா.ஜ.க பொறுப்பாளர் சுபா ஆவோ கிறிஸ்தவ மத தலைவர்களை சந்தித்து உரையாடினார் பிஷப் கே ஜான்சன் உள்ளிட்டோர் இந்த கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர்.

அப்போது பேசிய சுபா ஆவோ அனைவரையும் உள்ளடக்கிய அனைவருக்குமான வளர்ச்சி தான் பிரதமர் மோடி அவர்களின் இலக்கு, மதத்தின் பெயரால் மோதல் இருக்கக் கூடாது என்பதே மோடியின் வேண்டுகோளின்.


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், தமிழக பா.ஜ.க பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோரையும் சுபா ஆவோ சந்தித்தார். வடகிழக்கு மாநிலங்களில் இருந்து மேலும் பா.ஜ.க தலைவர்கள் தமிழகம் வர தயாராக உள்ளனர். அவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் கலந்துரையாடல் கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையிலுக்கு எதிரான கட்சி என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடிக்க இது போன்ற நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருவதாக பா.ஜ.க'வினர் தெரிவித்தனர்.


Source - dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News