Kathir News
Begin typing your search above and press return to search.

தொகுதி பங்கீடு விவகாரம்.. ஆலோசனையில் ஈடுபடும் பா.ஜ.க!

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இதனால் தொகுதிகள் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தொகுதி பங்கீடு விவகாரம்.. ஆலோசனையில் ஈடுபடும் பா.ஜ.க!

ThangaveluBy : Thangavelu

  |  4 March 2021 6:19 AM GMT

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது. இதனால் தொகுதிகள் பங்கீடு தொடர்பான முடிவுகள் எடுப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக கூட்டணியில் பாமகவிற்கு மட்டும் 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுக்கு இன்னும் எத்தனை தொகுதிகள் என்பது முடிவாகவில்லை. இதனால் மற்ற கட்சிகள் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு வருகின்றது.




இந்நிலையில், பாஜக தலைவர்கள் அதிமுக தலைமையிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இன்னும் சுமூகமாக முடிவு எடுக்கப்படவில்லை.

தேசிய கட்சியான பாஜகவுக்கு இதுவரையில் தொகுதிகள் உறுதி செய்யப்படவில்லை. அதிமுகவிடம் கணிசமான தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக தகவல்கள் வெளிவரும் நிலையில், அதிமுகவுடன் தொகுதி பங்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.




இந்த ஆலோசனையானது சென்னை கமலாலயத்தில் நடைபெறுகிறது. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் தமிழக மேலிட பொருப்பாளர் சி.டி ரவி, எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News