ஒரு புறம் மீட்பு பணி, மறு புறம் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ! பம்பரம் போன்று சுழலும் பா.ஜ.க எம்.எல்.ஏ. எம்.ஆர்.காந்தி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழையால் மிக அதி கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைக்கின்ற பணிகளை நாகர்கோயில் பாஜக எம்.எல்.ஏ., எம்.ஆர்.காந்தி தனது தொகுதியில் பம்பரம் போன்று சுழன்று வருகிறார்.
By : Thangavelu

அது போன்று நேற்று மேல் சங்கரன்குழு ஊராட்சியில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஊராட்சி தலைவர் முத்து சரவணனுடன் பார்வையிட்டுள்ளார்.
மற்றொரு புறம் தடுப்பூசி முகாம்களையும் தொடங்கி வைத்து, கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக தடுப்பூசிகளை பொதுமக்கள் போடுவதற்கு விழிப்புணர்வுகளையும் ஏற்படுத்தி வருகிறார்.
சென்னையில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் பார்வையிடுவதற்கே வரவில்லை என்ற குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன்வைத்த நிலையில், தனது வயதையும் பொருட்படுத்தாமல் நாகர்கோயில் முழுவதும் பம்பரம் போன்று சுழன்று வெள்ள மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளதை அத்தொகுதி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது போன்ற எம்.எல்.ஏ, நம்ம தொகுதிகளிலும் கிடைக்கவில்லையே என்று சென்னை வாசிகளும் மனக்குமுறலையும் பார்க்க முடிகிறது.
Source, Image Courtesy: M.R.Gandhi MLA Twiter