Kathir News
Begin typing your search above and press return to search.

'மனசாட்சியே இல்லாத அரசுன்னா அது தி.மு.க அரசுதான்' - வானதி சீனிவாசன்

'மனசாட்சி அற்ற அரசு என்றால் அது தி.மு.க அரசு தான்' என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

மனசாட்சியே இல்லாத அரசுன்னா அது தி.மு.க அரசுதான் - வானதி சீனிவாசன்
X

Mohan RajBy : Mohan Raj

  |  6 July 2022 5:05 PM IST

'மனசாட்சி அற்ற அரசு என்றால் அது தி.மு.க அரசு தான்' என பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் பேசியுள்ளார்.

மக்கள் விரோத தி.மு.க அரசை கண்டிக்கிறோம் என்ற பெயரில் பா.ஜ.க சார்பில் உண்ணாவிரத போராட்டம் தமிழக முழுவதும் நேற்று நடைபெற்றது.

அதில் கோவை சிவானந்த காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது, அதில் பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, 'ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு மனசாட்சி இல்லாத அரசாக உள்ளது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, ஓராண்டில் சட்டம் ஒழுங்கு மோசம் அடைந்து லாக்கப் மரங்கள் அதிகரித்துள்ளன.


பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதோடு முந்தைய அ.தி.மு.க அரசு செயல்படுத்திவந்த தாலிக்கு தங்கம், பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்டங்களையும் இந்த அரசு நிறுத்திவிட்டது' என அவர் பேசினார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News