மத்திய அரசு ஒதுக்கும் நிதியை பயன்படுத்தாமல் இருக்கும் தி.மு.க. அரசு: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை கூட சரியாக பயன்படுத்த முடியாத அரசாக திமுக உள்ளது என்று, பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
By : Thangavelu
தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கும் நிதியை கூட சரியாக பயன்படுத்த முடியாத அரசாக திமுக உள்ளது என்று, பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் விடுதலை போராட்ட வீராங்கனை வேலு நாச்சியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் விமானம் மூலம் மதுரைக்கு இன்று வந்திருந்தார். அதன் பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: ஜனவரி 12ம் தேதி பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்து 12 புதிய மருத்துவ கல்லூரிகளை திறந்து வைக்கிறார். இதன் பின்னர் மதுரையில் நடைபெறும் கட்சி நிகழ்விலும் கலந்து கொள்கிறார்.
ஆங்கிலேயரை வீழ்த்தி வெற்றி கொண்ட வீரத்தமிழ் ராணியை
— Vanathi Srinivasan (@VanathiBJP) January 3, 2022
நினைவு கூர்ந்து பெருமைப்படுத்தியதற்கு
நன்றி @narendramodi ji அவர்களே!.#velnachiyar @BJPMahilaMorcha https://t.co/dFUTzRECim
கடந்த அதிமுக ஆட்சியின்போது தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகை புரிந்த போது, கோபேக் மோடி என்ற பதாகைகளை வைத்திருந்தனர். ஆனால் தற்போது கோ பேக் என்று அவர்களால் காட்ட முடியாது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி வருகிறார். அதே போன்று கடந்த முறை தமிழகத்தில் ஆயுத தளவாட கண்காட்சியை திறந்த வைக்க வந்த பிரதமர் மோடிக்கு எதிராக கோ பேக் என்று திமுகவினர் சொல்லியிருந்தனர். ஆனால் அந்த திட்டத்தின் வாயிலாக தற்போது ரூ.2000 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக நிதியமைச்சர் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
பிரதமரை நீங்கள் திரும்பி போங்க என்று சொன்னாலும் அவர் ரூ.2000 கோடி ரூபாய் முதலீட்டை தமிழகத்திற்கு பெற்று தந்துள்ளார். எனவே இதனை திமுகவினர் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறோம். மேலும், மத்திய அரசு, தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கினாலும் அதனை சரிவர பயன்படுத்தாத அரசாக திமுக இருப்பது வேதனை அளிக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் செங்கலை வைத்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் நடைபெறவில்லை என்றார். தற்போது நீங்கள் ஆட்சிக்கு வந்து விட்டீர்கள் ஏன் திட்டம் நடைபெறவில்லை என்ற கேள்வியை எழுப்பினார்.
Source: Maalaimalar
Image Courtesy:BBC