சிறுமி மித்ராவின் மருந்துக்கான இறக்குதி வரியை மத்திய நிதியமைச்சர் நீக்கியுள்ளார்: பா.ஜ.க. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் ட்விட்.!
சிறுமி மித்ரா மருந்துக்கான இறக்குமதி வரியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நீக்கியுள்ளார் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவியும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் ட்விட்டர் பதில் குறிப்பிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த சிறுமி மித்ரா, அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக அச்சிறுமி நடக்க முடியாமல் அவதியுற்று வந்தார். உரிய மருத்துவம் அளிக்க முடியா நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படுகின்ற நிலைக்கு அக்குழந்தை தள்ளப்பட்டது.
தற்போது குழந்தை மித்ரா சிகிச்சைக்கு தேவையான ரூ.16 கோடி கிடைத்துள்ளது. ஆனால் அந்த மருந்தை இறக்குமதி செய்ய வேண்டும் என்றால் 6 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சிறுமி மித்ராவிற்கான மருத்துவ சிகிச்சை மருந்துக்கான இறக்குமதி வரி நீக்கத்திற்காக இன்று காலை மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக பேசினேன். உதவுதாக தாயுள்ளத்துடன் பரிவோடு கூறியுள்ளார்கள். எனக்குறிப்பிட்டுள்ளார்.