"அவங்க பக்ரீத் மாமிசத்தை நிறுத்தட்டும், நாங்க தீபாவளி பட்டாசை நிறுத்துறோம்" -பா.ஜ.க எம்.பி பொளேர்.!
"அவங்க பக்ரீத் மாமிசத்தை நிறுத்தட்டும், நாங்க தீபாவளி பட்டாசை நிறுத்துறோம்" -பா.ஜ.க எம்.பி பொளேர்.!

By : Saffron Mom
தனது சர்ச்சைக்குரிய மற்றும் வெளிப்படையான கருத்துக்களுக்கு பெயர்பெற்ற பா.ஜ.க MP சாக்ஷி மஹராஜ், மீண்டும் அவர் பதிவிட்ட ஒரு கருத்து மக்களிடையே பரபரப்பை உண்டாகியுள்ளது. அவர் பதிவு செய்த பேஸ்புக் போஸ்ட் ஒன்றில், எப்போது பக்ரீத்தில் ஆடுகளைப் பலியிடுவதை நிறுக்கிறார்களோ அப்போது தீபாவளியில் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்துகிறோம் என்று பதிவு செய்துள்ளார்.
"எந்த ஆண்டு பக்ரீத்தில் ஆடுகள் வெட்டப்படுவது நிறுத்தப்பட்டுக் கொண்டாடப்படுகின்றதோ, அப்போது தீபாவளி பண்டிகை பட்டாசுகள் இல்லாமல் கொண்டாடப்படும்" என்று சமூக வலைத்தளங்களில் சாக்ஷி மகாராஜ் தெரிவித்திருந்தார்.
அவர் இறுதியாகப் பதிவிட்ட போஸ்டில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் தன்னை நெருங்கிய உள்ள சுற்று வட்டத்தை எச்சரிக்கையாக இருக்கவும் கேட்டுக்கொண்டார்.
கடந்த மாதமும் இதுபோல் ஒரு கருத்தை மகாராஜ் வெளியிட்டார். அதில், "ஒரு கிராமத்தில் ஒரு முஸ்லீம் வீடு உள்ளபோதிலும் அவர்களுக்கு என்று ஒரு கல்லறை உள்ளது ஆனால் அதே கிராமத்தில் இந்துக்கள் அதிகமாக உள்ளபோதிலும் அவர்களுக்கு என்று எரியூட்டப்படும் இடம் எதுவும் இல்லை. அந்த நிலையில் இந்துக்கள் தங்கள் உறவினர்களை ஆற்றங்கரையில் அல்லது வயல்களில் தகனம் செய்கின்றனர், இது நியமற்ற செயல் அல்லவா," என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
எனவே கல்லறை மற்றும் எரியூட்டும் கட்டவேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்துக்களின் தைரியத்தைச் சோதனை செய்து பார்க்கக்கூடாது என்று உன்னாவ் மக்களவை MP எச்சரிக்கை விடுத்தார்.
