Kathir News
Begin typing your search above and press return to search.

'தமிழ் மண்ணில் ஆட்சி அமைக்க பா.ஜ.க 144 தொகுதியில் இலக்கு' - மத்திய அமைச்சர் எல்.முருகன்!

தமிழ் மண்ணில் ஆட்சி அமைக்க பா.ஜ.க 144 தொகுதியில் இலக்கு - மத்திய அமைச்சர் எல்.முருகன்!

ThangaveluBy : Thangavelu

  |  9 July 2022 12:12 PM GMT

புதுச்சேரியில் வருகின்ற மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.க. சார்பில் நடைபெற வேண்டிய தேர்தல் பணிகளைத் தொடங்கி வைத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பல்வேறு கருத்துக்களை கூறினார். வருகின்ற 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயார் செய்யும் விதமாக பா.ஜ.க. சார்பில் நாடு முழுவதும் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரி மக்களவையின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மூன்று நாள் பயணமாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கடந்த வியாழக்கிழமை புதுச்சேரிக்கு வருகை புரிந்தார். முதல் நாளில் காரைக்கால் பகுதியில் உள்ள கட்சியினரை சந்தித்து கலந்துரையாடினார். அதனை தொடர்ந்து புதுச்சேரி சென்ற அவர் காலாப்பட்டு, கனகசெட்டிக்குளம் பகுதியில் ஆலய தரிசனம் செய்துவிட்டு மீனவ சமூதாய மக்களிடம் கலந்துரையாடினார்.

அதனை முடித்த அவர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களின் நலன் காக்கத் தனியாக ஒரு அமைச்சகத்தை உருவாக்கியவர் பிரதமர் மோடி. ஆனால் அதற்கு முன்னால் வரையில் வெறும் 3 ஆயிரம் கோடி மட்டுமே மீனவ துறைக்கு என்று நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது 32 ஆயிரம் கோடி ரூபாய் மீனவர் நலன்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடல் வளத்தை பாதுகாக்கப்படுகிறது.

மேலும், அதனை தொடர்ந்து மக்களவை தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய எல்.முருகன், வருகின்ற மக்களவை தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெற வேண்டும் என்கின்ற இலக்கோடு நாம் செயலாற்ற வேண்டும். அதன்படி தமிழகம், புதுச்சேரி, ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் 144 தொகுதிகளில் வெற்றிபெறுவதற்கு அடையாளம் காணப்பட்டுள்ளது. அதன்படி நாம் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: One India Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News