கோயில் நகைகளை உருக்குவதற்கு தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை! பா.ஜ.க. கடும் எதிர்ப்பு!
கோயிலில் உள்ள தங்க நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
By : Thangavelu
கோயிலில் உள்ள தங்க நகைகளை உருக்கி அதனை வங்கிகளில் முதலீடு செய்து அதில் வரும் வட்டியை செலவு செய்வோம் என்பது சட்ட விரோதமானது என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பக்தர்கள் கோவிலுக்கு செலுத்தும் தங்க காணிக்கைகளை உருக்கி அதை வங்கிகளின் மூலம் தங்க பத்திரங்களாக மாற்றி அதன் மூலம் கிடைக்கக்கூடிய வட்டியை மற்ற கோவில்களின் பராமரிப்புக்கு செலவு செய்வோம். இது சட்டவிரோதமானது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.
செலவிடுவது முறையான செயல் அல்ல. மேலும், அமைச்சர் திரு.சேகர் பாபு அவர்கள், திருப்பதி கோவிலில் இது போன்று செய்வதாக சொல்லியிருப்பது உண்மைக்கு புறம்பானது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்த கோவில்களின் சொத்தின் மூலம் அல்லது அதன் வருமானத்தை கொண்டே அந்த கோவில்களுக்கு செலவிடப்படுகிறது என்பதே உண்மை.
ஆகவே, சட்டத்திற்கு புறம்பான, மக்கள் நம்பிக்கைக்கு விரோதமான இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதோடு, இந்த அறமற்ற செயலை இந்து அறநிலையத்துறையின் மூலம் செய்ய முனையும் நடவடிக்கையை தமிழக அரசு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: Bjp Spokesperson Narayanan Thirupathy
Image Courtesy: Dinamalar