Kathir News
Begin typing your search above and press return to search.

'தி.மு.க ஆட்சியின் ஊழல்களை வீதிவீதியாக மக்களிடத்தில் கொண்டு செல்லுங்கள்' - பா.ஜ.க'வினரை தட்டிக்கொடுத்த பி.எல்.சந்தோஷ்

தி.மு.க'வின் ஆட்சி ஊழல்களை மக்களிடத்தில் சொல்லுங்கள் என பா.ஜ.க தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க'வினர் மத்தியில் பேசியது பரபரப்பாகியுள்ளது.

தி.மு.க ஆட்சியின் ஊழல்களை வீதிவீதியாக மக்களிடத்தில் கொண்டு செல்லுங்கள் - பா.ஜ.கவினரை தட்டிக்கொடுத்த பி.எல்.சந்தோஷ்

Mohan RajBy : Mohan Raj

  |  21 Jun 2022 10:14 AM GMT

தி.மு.க'வின் ஆட்சி ஊழல்களை மக்களிடத்தில் சொல்லுங்கள் என பா.ஜ.க தேசிய அமைப்பு செயலாளர் பி.எல்.சந்தோஷ் ஆலோசனை கூட்டத்தில் பா.ஜ.க'வினர் மத்தியில் பேசியது பரபரப்பாகியுள்ளது.

தமிழக பா.ஜ.க மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களுக்கான பயிற்சி முகாம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் 17, 18, 19 என மூன்று நாட்கள் நடந்தது. அதில் பா.ஜ.க அமைப்பு பொதுச் செயலர் பி.எல்.சந்தோஷ், மேலிட பொறுப்பாளர் பொறுப்பாளர் சி.டி.ரவி, கூடுதல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் பொறுப்பாளர் முரளிதரராவ், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்றனர்.

அதில் பேசிய பி.எல்.சந்தோஷ் கூறியதாவது, 'தமிழகத்தில் பா.ஜ.க'வுக்கு சாதகமான சூழல் நிலவுகிறது, மோடி தலைமையிலான மத்திய அரசு எட்டு ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது அந்த திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற்றுள்ளனர். மத்திய அரசின் திட்டங்களை தமிழக பா.ஜ.க'வினர் வீடுதோறும் எடுத்துச் செல்ல வேண்டும்.

தி.மு.க அரசு பொறுப்பேற்று ஓராண்டு முடிந்துள்ள நிலையில் அனைத்து துறைகளிலும் ஊழல் செய்துள்ளனர், அந்த ஊழல்களை மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்து வருகிறார். அவர் மட்டுமல்லாமல் அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் தி.மு.க அரசின் கொள்ளைகளை மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.


மேலும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை மையப்படுத்தி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடர் போராட்டங்களை பா.ஜ.க'வினர் முன்னெடுக்க வேண்டும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர வேண்டும், தமிழக மக்கள் பா.ஜ.க'வுக்கு வாக்களிக்க ஆர்வமாக உள்ளனர். அனைத்து தொண்டர்களும் நிர்வாகிகளும் முழுநேரமாக கட்சிப் பணிகளில் ஈடுபடுவதன் வாயிலாக வரும் லோக்சபா தேர்தலின்போது தொகுதியில் பா.ஜ.க உறுதியாக தமிழகத்தில் வெற்றி பெறும்' என பி.எல்.சந்தோஷ் பேசினார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News