Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க சார்பில் பிரமாண்டமாக இப்தார் நோன்பு திறப்பு விழா - இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை

Ramzan Function Behalf of BJP

பா.ஜ.க சார்பில் பிரமாண்டமாக இப்தார் நோன்பு திறப்பு விழா - இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்த அண்ணாமலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  25 April 2022 5:09 PM IST

பா.ஜ.க சார்பில் நடத்தப்படும் இப்தார் நோன்பு திறக்கும் விழாவிற்கு மாநில தலைவர் அண்ணாமலை இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமியர்களின் கடமைகளில் முக்கியமாக கருதப்படும் ரமலான் நோன்பு தற்பொழுது கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல இடங்களில் ரமலான் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ரமலான் பிறை பார்க்கப்பட்டு கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி முதல் இஸ்லாமியர்கள் நோன்பு துவங்கி கடைபிடித்து வருகின்றனர்.


இந்த நிலையில் சென்னை தியாகராயர் நகர் அபிபுல்லா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை 24'ம் தேதி மாலை 4:30 மணி அளவில் பா.ஜ.க'வின் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தலைமை வகிக்கிறார், மேலும் பா.ஜ.க சிறுபான்மை அணி மாநில தலைவர் ஆசிம்பாஷா, பா.ஜ.க எம்.எல்.ஏ வானதி சீனிவாசன், பாஜக மாநில சிறுபான்மை அணி துணைத் தலைவர் எம்.எஸ்.ஷா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

இந்த விழாவிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவான முஸ்லிம் ராஷ்ட்ரீய மஞ்ச்சின் தேசிய துணை தலைவர் பாத்திமா அலி வரவேற்பு நிகழ்த்துகிறார். அனைத்து இஸ்லாமியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார்.



Source - BJP Leader Annamalai Tweet



Next Story
கதிர் தொகுப்பு
Trending News