Kathir News
Begin typing your search above and press return to search.

2024 தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க - A, B, C, D என 4 வகையாக மாநிலங்கள் பிரிப்பு! நட்டா 100 நாள் பயணம்!

2024 தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க - A, B, C, D என 4 வகையாக மாநிலங்கள் பிரிப்பு! நட்டா 100 நாள் பயணம்!

2024 தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க - A, B, C, D என 4 வகையாக மாநிலங்கள் பிரிப்பு! நட்டா 100 நாள் பயணம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  17 Nov 2020 8:36 AM GMT

பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா பொறுப்பேற்று முதன்முதலாக பீகார் சட்டசபை தேர்தலை சந்தித்தார். அதில் வெற்றி பெற்ற கையோடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா, தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி மாநில தேர்தல் பணிகளை பா.ஜ.க முடிக்கி விட்டுள்ளது.

அதுபோக 2024 இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கும் ஜே.பி.நட்டா தனது தேர்தல் பணியை துவக்கி விட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. 2014-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் ராஜ்நாத் சிங் தேசிய தலைவராக பா.ஜ.க எதிர்க்கொண்டது. 2019-ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை பா.ஜ.க அமித் ஷா தலைமையில் எதிர்க்கொண்டது. இதன் தொடர்ச்சியாக 2024-ஆம் ஆண்டு தேர்தல் ஜே.பி.நட்டா தலைமையில் எதிர்க்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் முதல் கட்டமாக ஜே.பி.நட்டா மாநிலங்களுக்கு நூறு நாள் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் சில நாட்கள் தங்கி இருந்து அம்மாநில பா.ஜ.க-வின் தற்போதைய நிலை, மேற்கொள்ள வேண்டிய கட்சி வளர்ச்சி பணிகள், கூட்டணி குறித்த முடிவுகள் ஆகியவை குறித்து ஆலோசிப்பார் என்று கூறப்படுகிறது.

மாநிலங்களை வகைப்படுத்துதல்:

இதற்காக மாநிலங்களை வகைப்படுத்தியுள்ளது பா.ஜ.க.

A வகை மாநிலங்கள் தற்போது பா.ஜ.க வலுவாக இருந்து ஆட்சியில் அல்லது கூட்டணி ஆட்சியில் இருக்கும் மாநிலங்களை உள்ளடக்கியதாகும். இவ்வகையில் கர்நாடகா, பீகார், நாகாலாந்து, திரிபுரா, குஜராத், மத்திய பிரதேசம் போன்றவை அடங்கும்.

அடுத்து B வகை மாநிலங்கள் என்பது தற்சமயம் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலங்களை குறிக்கும். இவ்வகையில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், டெல்லி, பஞ்சாப், ஒடிசா போன்றவை அடங்கும்.

அடுத்து C வகை மாநிலங்களில் சிறிய மாநிலங்களான லக்‌ஷதீப், மேகாலயா, மிசோரம் போன்ற மாநிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

D வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தேர்தலுக்கு செல்லும் மாநிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கேரளா, தமிழ் நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம், உத்திர பிரதேசம் ஆகியவை இந்த பிரிவில் அடங்கும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை நாள்?

A மற்றும் B பிரிவு மாநிலங்களில் தலா 3 நாட்கள் தங்கி தேர்தல் பணிகளை மேற்பார்வையிட உள்ளார் நட்டா. C பிரிவு மாநிலங்களில் தலா 2 நாட்கள் தங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பிக்னிக் சென்றுக் கொண்டே இருக்க, பா.ஜ.க-வோ 3 ஆண்டு கழித்து நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு தற்போதே தேர்தல் பணியை துவக்கி உள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News