பா.ஜ.க., விவசாயிகளை கடவுள் போன்று பார்க்கிறது.. எதிர்கட்சிகளுக்கு குஷ்பு அதிரடி பேச்சு.!
பா.ஜ.க., விவசாயிகளை கடவுள் போன்று பார்க்கிறது.. எதிர்கட்சிகளுக்கு குஷ்பு அதிரடி பேச்சு.!
By : Kathir Webdesk
முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை இரண்டு தலைமைகளும் பேசி முடிவு செய்யும் என சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
இந்நிலையில், விவசாயிகளின் நண்பன் மோடி என்கின்ற பிரச்சாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பாஜக ஆதரவாளருமான குஷ்பு கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: வட மாநிலங்களில் மட்டுமே விவசாயிகள் போராட்டம் நடைபெறுகிறது. தமிழகத்தில் விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்கின்றனர். விவசாயிகள் ஆதரவு தெரிவித்த பின்னரே வேளாண் சட்டமாக்கப்பட்டது. பாஜக விவசாயிகளை கடவுள் போல பார்த்து வருகிறது. அதனால் எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்.
மக்களின் பிரச்சனைகளை தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் பார்க்கவில்ல. அப்படி பார்த்திருந்தால் தி.மு.க., காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கும். டெல்லியில் நடைபெறும் போராட்டம் விவசாயிகள் போராட்டம் அல்ல எதிர்க்கட்சிகள் தூண்டிவிட்டு போராட்டம்தான். திமுக தலைவர் ஸ்டாலின் தைரியம் இருந்தால் அவர் நேரடியாக ரஜினியை விமர்சனம் செய்திருக்கலாமே. அதை விட்டுவிட்டு மறைமுகமாகச் விமர்சனம் செய்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.