Kathir News
Begin typing your search above and press return to search.

தற்காலிக ஆசிரியர் நியமனம் எதற்கு ஊழல் செய்யவா? - தி.மு.க அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

தற்காலிக ஆசிரியர் பணி தி.மு.க'வின் ஊழலுக்கு வழிவகுக்கும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தற்காலிக ஆசிரியர் நியமனம் எதற்கு ஊழல் செய்யவா? - தி.மு.க அரசுக்கு அண்ணாமலை கேள்வி!

Mohan RajBy : Mohan Raj

  |  30 Jun 2022 4:53 AM GMT

தற்காலிக ஆசிரியர் பணி தி.மு.க'வின் ஊழலுக்கு வழிவகுக்கும் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 'கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற சுமார் 30,000 மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்று பணிக்காக காத்திருக்கிறார்கள், இவர்களின் முதல் முறையும், இரண்டாவது முறையும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய அவர்களும் இருக்கிறார்கள்.

30,000 ஆசிரியர்கள் தகுதியுடன் பணிக்காக காத்திருக்கும் பொழுது இவர்களை எல்லாம் பணி நியமனம் செய்யாத அரசு தற்பொழுது தகுதி தேர்வு தேர்ச்சி பெறாத நபர்களைக் கொண்டு ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது கமிஷன், கரப்ஷன், கலெக்ஷனுக்கு வழிவகுக்கும் தி.மு.க அரசு தற்காலிக பணி நியமனத்தில் அதிக ஆர்வம் கட்டுவது ஏன்? கல்வித்துறையின் அறிக்கையை உடனடியாக வாபஸ் பெற்று கொண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்ற பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களை அந்த பணியிடங்களில் முறைப்படி கால ஊதியத்துடன் நியமிக்க வேண்டும்.

நாங்கள் ஒன்றும் பெரிதாக கேட்கவில்லை நீங்கள் கொடுத்த வாக்கை, நீங்கள் சொன்ன சொல்லை, நீங்கள் மக்களுக்குத் தான் இந்த உத்தரவாதத்தை, நீங்கள் சொன்ன உறுதிமொழியை தான் கேட்கிறோம், வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.

தமிழக மாணவர்களின் கல்வியுடன் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பதை தி.மு.க அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்' என அண்ணாமலை கூறியுள்ளார்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News