கரூரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு !
தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்புகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு புதிய மாவட்டத் தலைவர் வி.செந்தில்நாதன் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தார்.
By : Thangavelu
தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்புகள் மற்றும் அரசியல் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது அவருக்கு புதிய மாவட்டத் தலைவர் வி.செந்தில்நாதன் உற்சாகமான முறையில் வரவேற்பு அளித்தார்.
ஆளுங்கட்சியான திமுகவை விட அலறவிடும் அளவிற்கு கரூரில் பாஜக கொடிகள் கட்டப்பட்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, செந்தில்நாதன் வரவேற்பு கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி பூரண கும்ப மரியாதையும் அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில் பாலாஜி திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை அமைச்சராக வலம் வருகிறார். இவர் அம்மாவட்டத்தில் திமுகவை செல்வாக்காக வைத்துள்ளார். அவரை எதிர்த்து மற்ற அரசியல் கட்சிகள் செயல்படாமல் தடுப்பதை நோக்கமாக வைத்திருப்பவரும் ஒருவர் ஆவார். தற்போது அவரை அலறவிடும் அளவிற்கு கரூர் மாவட்ட பாஜக புதிய தலைவர் வி.செந்தில்நாதன் புதிய சம்பவத்தை நடத்தி முடித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டதற்கு பின்னர் பல மாவட்டங்களில் சென்று அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அது மட்டுமின்றி பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்களை அதிரடியாக நியமனம் செய்து வருகிறார். இதனால் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதனிடையே சொந்த மாவட்டமான கரூருக்கு அண்ணாமலை இன்று (நவம்பர் 16) வருகை புரிந்த நிலையில், அவருக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் மிகப்பெரிய வரவேற்பை அளித்துள்ளார்.
அதாவது பூரண கும்பமரியாதையுடன் வரவேற்பை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கொடுத்துள்ளார். அது மட்டுமின்றி சுமார் 5 கிலோ மீட்டர் அளவுக்கு பாஜக கொடிகளை கட்டியுள்ளார். இவை அனைத்தையும் அண்ணாமலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
மேலும், கரூர் மாவட்டத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள செந்தில்நாதனுக்கும், தற்போதைய திமுக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அரசியல் முன்பகை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 2011ம் ஆண்டு அரவக்குறிச்சி தொகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அதிமுக சார்பில் போட்டியிட செந்தில்நாதனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ளார். அப்போது செந்தில்பாலாஜி உள்ளடி வேலை பார்த்து செந்தில்நாதனை தோற்கடித்துள்ளார். இதனால் அப்போது முதல் செந்தில்பாலாஜியை தனது அரசியல் எதிராக செந்தில்நாதன் பார்த்து வருகிறார்.
தற்போது மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவில் மாவட்ட தலைவராக உருவெடுத்துள்ளதால், அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பல வழிகளில் செக் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலிடத்தின் சிக்னலுக்காக காத்திருக்கிறார் என கூறப்படுகிறது. சிக்னல் கிடைத்த பின்னர் பல அதிரடிகளை செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கரூர் நகரத்தில் திமுகவினர் அராஜகம் செய்து கொடிகளை கட்டி வைத்துள்ளனர். அப்போது போலீசாரிடம் நாங்களும் பாஜக கொடிகள் நகரம் முழுவதும் கட்டுவோம் முடிந்ததை பாருங்கள் என்ற சவால்களையும் செந்தில்நாதன் விட்டுள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதனை மெய்ப்பிக்கின்ற வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாஜக கொடியை கட்டி அசத்தியுள்ளார். அது மட்டுமின்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, கரூர் மாவட்ட மக்களுக்கு நல்லது செய்கின்ற வகையில் செந்தில்நாதன் செயல்படுவார் என்று கூறியுள்ளார்.
Source, Image Courtesy: One India