Kathir News
Begin typing your search above and press return to search.

"8 வழிச்சாலை வேணுங்கோ!" - நிதின் கட்கரியிடம் டெல்லியில் மன்றாடிய தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு !

8 வழிச்சாலை வேணுங்கோ! - நிதின் கட்கரியிடம் டெல்லியில் மன்றாடிய தி.மு.க அமைச்சர் எ.வ.வேலு !

Mohan RajBy : Mohan Raj

  |  12 Oct 2021 12:45 PM GMT

தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து சென்னை முதல் திருச்சி வரை 8 வழிச்சாலை அமைக்க கோரிக்கை வைத்துள்ளார்.

கடந்த அ.தி.மு.க ஆட்சிகாலத்தில் சேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தை தி.மு.க கடுமையாக எதிர்த்து வந்தது. அந்த திட்டத்தை அமல்படுத்தவே விடவில்லை, விவசாயிகளுக்கு என்னவாகுமோ? வீடுகள் போய்விடும் என்றெல்லாம் கூச்சல், குழப்பம் ஏற்படுத்தி கடைசி வரை அந்த திட்டத்தை நிறைவேற்றாமலே பார்த்துகொண்டது தி.மு.க அரசு.

இந்நிலையில் தற்பொழுது தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. ஆனால் கடந்த ஆட்சி காலத்தில் எட்டு வழிச்சாலை அமைக்க குறுக்கே விழுந்து தடுத்த தி.மு.க தற்பொழுது எட்டுவழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த டெல்லியில் சென்று மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை பார்த்துவிட்டு வந்துள்ளது.

தமிழ்நாடு பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார். இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, மத்திய அரசிடம் வைத்த கோரிக்கைகளை பகிர்ந்துகொண்டார். அதில், "தமிழ்நாட்டில் மத்திய அரசின் சார்பில் 500 கிலோமீட்டர் தூரம் சாலைப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை துரிதமாக முடிக்க கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. சென்னை-துறைமுகம் ஈரடுக்கு பாலம் அமைக்கும் பணியை விரைந்து செயல்படுத்த வேண்டும். மதுரை, கோவை மாநகரில் வட்ட சாலை அமைக்க வேண்டும். மாநகராட்சி மற்றும் நகராட்சியை சுற்றியுள்ள 10 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுங்கச் சவடிகளை அகற்ற வேண்டும்" என்று கோரிக்கை வைத்ததாக வேலு கூறினார்.

மேலும், "உழுந்துபேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் 8 இடங்களில் உள்ள இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். திருச்சியில் பேருந்து முனையம் அமைக்க வேண்டும். கோவையில் எல்.என்.டி கட்டுப்பாட்டில் உள்ள 22 கிலோ மீட்டர் தொலைவு சாலை இருவழி சாலையாக உள்ளது. அதனை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும். சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை திருச்சி வரை 8 வழியாகவும், திருச்சி - கன்னியாகுமரி இடையே 6 வழிச் சாலையாக மாற்றவும்' கோரிக்கை வைத்ததாக அமைச்சர் ஏ.வ.வேலு, கூறியுள்ளார்.


Source - ASIANET NEWS

Next Story
கதிர் தொகுப்பு
Trending News