பா.ஜ.க. டீசர்ட், தொப்பியை அணிந்து கொண்டு பிரச்சனை ஏற்படுத்த சில அரசியல் கட்சிகள் முயற்சி.. வானதி சீனிவாசன் எச்சரிக்கை!
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழகத்தில் பாஜகவை எதிர்ப்பதற்காக திமுக சில சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. அதிலும் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு எதிராக சில மர்ம நபர்களை வைத்துக்கொண்டு திமுக உள்ளிட்ட சில அமைப்புகள் வேலை செய்து வருகிறது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது இஸ்லாமியர்கள் வசிக்கின்ற பகுதி வழியாக செல்லும்போது, சில மர்ம நபர்கள் கடைகள் மீது கல்வீசியுள்ளனர். இந்த சம்பவத்துக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக தேசிய மகளிர் அணித்தலைவியும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கோவையில் இரண்டு தரப்பினர் இடையே சாதாரணமாக நடைபெற்ற வாக்குவாதத்தை வைத்து விஷமத்தனமான பரப்புரை நடப்பதாக வானதி சீனிவாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜகவிற்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, சில அரசியல் கட்சிகள் பாஜகவின் டீ சர்ட், தொப்பி உள்ளிட்டவைகளை அணிந்து கொண்டு பிரச்சனை ஏற்படுத்த முயல்கின்றனர்.
எனவே இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்படுவதாக கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு வைக்கப்படும் எனக் கூறினார்.